உணவைப் பொறுத்தவரை அவரவர் விருப்பம் சார்ந்தது. சைவம், அசைவம் என இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன.
இப்போது அசைவ உணவில் மட்டும் என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அசைவ உணவு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்காது.
செரிமானம், குடல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்துவிடலாம்.
குழந்தையின்மை பிரச்சனை இருப்பவர்களும் அசைவ உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்
அதேபோல், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அசைவை உணவுகளை சரிவிகித அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்
இருப்பினும், உங்களின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனையை பெற்று அசைவ உணவை சாப்பிடுவது குறித்து முடிவெடுக்கலாம்.