வெயிட் லாஸ் செய்ய..‘இந்த’ மேஜிக் இலையை வெறும் வயிற்றில் மென்று முழுங்குங்கள்..

Weight Loss Tips Eat This Magic Leaves : நம் அனைவருக்குமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உதவும் ஒரு இலை குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 6, 2025, 06:37 PM IST
  • வெயிட் லாஸ் டிப்ஸ்
  • இதற்கு உதவும் மேஜிக் இலை
  • காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்!
வெயிட் லாஸ் செய்ய..‘இந்த’ மேஜிக் இலையை வெறும் வயிற்றில் மென்று முழுங்குங்கள்..

Weight Loss Tips Eat This Magic Leaves : நம் அனைவரும் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டிருப்போம். ஒரு சிலர் கடின முயற்சியால் அதனை குறைத்திருப்போம், ஒரு சிலர் அதே எடையிலேயே பேலன்ஸ் செய்து கொண்டிருக்கும்.ஒரு சிலருக்கு, என்ன  டயட் அல்லது உடற்பயிற்சி செய்தும் வேலைக்கு ஆகாமல் போயிருக்கும். இங்கு ஒரு மேஜிக் இலை, நம் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா?

Add Zee News as a Preferred Source

முருங்கை இலை:

‘உணவே மருந்து’ என்பதுதான் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த கூற்றாகும். அப்படிப்பட் உடலுக்கு நன்மை தரும் சில ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்றாக இருப்பது, முருங்கை இலை. அதிக புரதச்சத்து நிறைந்த இந்த உணவு, உடலுக்கு கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகளை கொடுக்குமாம். இது, நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

முருங்கை இலையை பலர் ஜூஸ் போட்டு குடிப்பர், சிலர் பொறியல் செய்து சாப்பிடுவர், சிலர், கடைந்து குழம்பாக்கி சாப்பிடுவர். இதனை, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நம்பப்படுகிறது.

உடல் எடையை குறைக்கும்..?

முருங்கை இலையை, சாறாகவோ அல்லது வெறுமெனே கூட வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. இதனால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, நமக்கு அதிக பசி ஏற்படாமலும் தடுக்குமாம். இதனால், நம் உடலின் புரதச்சத்து அதிகரித்து, கொழுப்பின் அளவும் ஏறாமல் இருக்கும். மெட்டபாலிசம் அதிகரிப்பதால், உடல் கொழுப்புகள் வேகமாக எரியும் என்றும் கூறப்படுகிறது.

கிரேவிங்க்ஸை கட்டுப்படுத்தும்:

உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம், அவ்வப்போது நமக்கு சாப்பிடுவது போல தோன்றுவதும் அடிக்கடி அதீத பசி ஏற்படுவதும்தான். எனவே, வயிறை முழுமையாக உணர வைக்க கண்டிப்பாக முருங்கை இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.

அழற்சி எதிர்ப்பு தன்மைகள்:

முருங்கை இலை, நம் வயிறு உப்பசம் ஆகாமல் தடுக்கிறதாம். இதனால், உடல் எடை ஏறாமல் இருப்பதுடன் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

செரிமானத்தை சரிசெய்யும்:

இந்த இலை, நம் உடல் சரியான அளவில் செரிமானம் ஆவதை கவனிக்கிறது. இதில், அதிக ஃபைபர் சத்துகள் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது என்றும், குடல் இயக்கமும் சரியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உடலுக்கு எனர்ஜி தரும்:

முருங்கை இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அதிக சச்த்துகள் உள்ள வைட்டமின்கள் உடலுக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகளும் உடலுக்கு நன்மை பயக்கிறது. இதனால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களுக்கு சரியான அளவில் ஆக்சிஜன் செல்கிறது. இந்த காரணத்தால் மயக்கம் வருவது, தலை சுற்றுவது ஆகியவை ஏற்படாமல் இருக்கிறது. உடலும் ஆற்றலுடன் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இதனை பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News