)
Ayushman Yojana Documents: இந்தியாவில் பல நன்மை பயக்கும் மற்றும் நலத்திட்டங்கள் தற்போது செல்பட்டு வருகின்றன, இதில் நீங்கள் எந்த திட்டத்திற்கு தகுதியுடையவராக இருக்கிறீர்களோ அந்தத் திட்டத்தை தேர்வு செய்து அதில் சேர்ந்துக் கொள்ளலாம். நீங்கள் நிதி சலுகைகள் அல்லது வேறு ஏதேனும் சலுகைகளை பெற விரும்பினால், அதற்கேற்ப பல திட்டங்கள் உள்ளன அதில் சேர்ந்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Yojana) என்கிற திட்டம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவராக இருந்தால், இந்தத் திட்டத்தில் சேர்ந்துக் கொண்டு பல இசவச நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உண்மையில், இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச சிகிச்சையின் பலன் வழங்கப்படுகிறது, இதற்காக, தகுதியுள்ளவர்களின் ஆயுஷ்மான் அட்டைகள் முதலில் உருவாகப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆயுஷ்மான் அட்டையைப் பெற நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், இதைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படியில்லை எனில் என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் எப்படி பெறுவது என்கிற முழுமையாக தகவலை இந்த கட்டுரையில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் அட்டையின் நன்மைகள்
நீங்கள் ஆயுஷ்மான் அட்டையைப் பெற்றால், இதன் மூலம் இலவச சிகிச்சையைப் பெறலாம். இந்த அட்டையில், அட்டைதாரர் ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவார்கள். உங்கள் இலவச சிகிச்சைக்கான செலவை அரசாங்கமே ஏற்கிறது. அதாவது, நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.
ஆயுஷ்மான் அட்டையை எவ்வாறு பெறுவது?
ஆன்லைன் முறை
நீங்கள் ஆயுஷ்மான் அட்டையைப் பெற தகுதியுடையவராக இருந்தால், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmjay.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இது தவிர, அதிகாரப்பூர்வ செயலியான ஆயுஷ்மான் செயலி மூலமாகவும் நீங்கள் விண்ணப்பித்து உங்கள் ஆயுஷ்மான் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆஃப்லைன் முறை
ஆயுஷ்மான் அட்டையை ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் உங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் செல்ல வேண்டும். இங்கே உங்கள் தகுதியைச் சரிபார்க்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திக்க வேண்டும். தகுதி பெற்றதாகக் கண்டறியப்பட்ட பிறகு, உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அனைத்தும் சரியாகக் கண்டறியப்பட்டால், உங்கள் ஆயுஷ்மான் அட்டைக்கான விண்ணப்பம் செய்யப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் உங்கள் ஆயுஷ்மான் அட்டை உருவாக்கித் தரப்படும், அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் இலவச சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் அட்டையைப் பெற எண்ணென ஆவணங்கள் தேவைப்படும்?
நீங்களும் ஆயுஷ்மான் அட்டையைப் பெற விரும்பினால், சில ஆவணங்கள் தேவைப்படும். இதில் முதல் ஆவணம் உங்கள் ஆதார் அட்டை, இரண்டாவது ரேஷன் அட்டை, பிரதமர்/முதல்வர் தகுதி கடிதம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண் போன்றவை தேவைப்படும். உங்களிடம் இந்த ஆவணங்கள் இல்லையென்றால், ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ