நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு என்ன படிக்கலாம்? சிறந்த மருத்துவப் படிப்புகளின் பட்டியல்!

Benefits After Clearing Neet Exam: நீட் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால், அதன் பிறகு என்ன படிக்கலாம் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ள முழு விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 14, 2025, 01:50 PM IST
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு என்ன படிக்கலாம்? சிறந்த மருத்துவப் படிப்புகளின் பட்டியல்!

List Of Best Medical Courses: நீத் தேர்வு 2025 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், நீட் தேர்வின் கீழ் எந்தெந்த மருத்துவப் படிப்புகளை படிக்கலாம்? மருத்துவம் படிப்பதற்கு என்னென்ன பாடங்கள் படித்திருக்க வேண்டும்? நாடு முழுவதும் எத்தனை பிரபலமான மருத்துவப் படிப்புகள் உள்ளது என்பதைக் குறித்து பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

எம்பிபிஎஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலை கட்டாயப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும்.

நீத் தேர்வின் கீழ் பிரபலமான மருத்துவப் படிப்புகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

- எம்பிபிஎஸ் (MBBS) எனும் இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல்.
பிடிஎஸ் (BDS) எனும் பல் அறுவை சிகிச்சை இளங்கலை மருத்துவம்.
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (BAMS)
யுனானி மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (BUMS)
பி.எச்.எம்.எஸ் (BHMS) எனும் ஹோமியோபதி மருத்துவம் இளங்கலை அறுவையியல்
சித்த மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (BSMS)
உயிரி மருத்துவ இளங்கலை அறுவையியல் (BSW)
பிபிடி (BPT) எனும்(பிசியோதெரபி இளங்கலை மருத்துவம்.
கால்நடை இளங்கலை அறுவையியல் (B.V.Sc & AH)

நீட் தேர்வு எழுதாமல் படிக்கக்கூடிய பிற மருத்துவப் படிப்புகள் எவை?

மரபியல் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் (Bachelor of Science in Genetics)
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை இளங்கலைப் பட்டம் (Bachelor of Nutrition and Dietetics)
கார்டியோ-பல்மனரி பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் (Cardio-Pulmonary Perfusion Technology)
சுவாச சிகிச்சை இளங்கலை பட்டம் (Bachelor of Respiratory Therapy)
உயிரி மருத்துவப் பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் (Bachelor of Technology in Biomedical Engineering)
நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் (Bachelor of Science in Microbiology)
உயிரி மருத்துவப் பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் (Bachelor of Technology in Biomedical Engineering)
உயிரி தொழில்நுட்பத்தில் இளங்கலை அறிவியல் (Bachelor of Science in Biotechnology)
இதய அல்லது இருதய தொழில்நுட்பத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் (Bachelor of Science in Cardiac or Cardiovascular Technology)

இவை அனைத்தும் மருத்துவத் துறையுடன் தொடர்புடைய தொழில்நுட்பப் படிப்புகளாகும். இந்தப் படிப்புகள் மருத்துவத் துறையில் முனைவர் பட்டப்படிப்புகளின் கீழ் வராது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான படிப்புகளில் இளங்கலை அறிவியல் (B.Sc) அல்லது இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech) ஆகும்.

இளங்கலைப் பட்டம் முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

இளங்கலைப் பட்டம் பெற்றவுடன், எந்தவொரு சிறப்புப் பாடத்திட்டத்திலும் முதுகலை பட்டப்படிப்புக்குத் தயாராகலாம்.

மேலும் படிக்க - NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள்.. எங்கே? எப்படி? வெளியானது முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க - 'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது...' கட் அண்ட் ரைட்டாக சொன்ன உச்ச நீதிமன்றம் - காரணம் என்ன?

மேலும் படிக்க - ரூ.50 ஆயிரம் + 1 சவரன் தங்கம்... தமிழக அரசின் திருமண நிதி உதவி - இவர்களுக்கு மட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News