)
Tirupati Hair Tonsure : திருப்பதியில், நாள் முழுவதும் லட்சக்கணக்கானோர் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். கூடவே, ஒரு சிலர் தலைமுடியை காணிக்கையாக கொடுக்கின்றனர். ஒரு சிலர், முழு முடியை கொடுப்பர், இன்னும் சில பேர் முனை முடியை மட்டும் கொடுப்பர். மனதில் எதையாவது நினைத்து, வேண்டுதல் வைத்துக்கொண்டு அதை நிறைவேறினால் அவர்கள் முடியை காணிக்கையாக செலுத்துவர். இந்த முடி பின்னர் எங்கு செல்கிறது தெரியுமா?
கடந்த மே 27ஆம் தேதி வரை, 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களுடைய தலைமுடியை காணிக்கையாக செலுத்தியிருப்பதக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது. இதை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 லட்ச பக்தர்கள் மட்டுமே முடிக்காணிக்கை செலுத்தியிருந்தனர்.
விடுமுறை இப்போதுதான் முடிந்தது என்பதால், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இதனால், முடிக்காணிக்கை செலுத்தியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
திருமலை திருப்பதியில், பக்தர்கள் முடியை காணிக்கையாக செலுத்துவது மட்டும்தான் நம் அனைவருக்கும் தெரிகிறது, ஆனால் அந்த முடிக்கான தேவை எவ்வளவு இருக்கிறது நமக்கு தெரியாது. இந்த முடியை, டன் கணக்காக முடி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மின்னணு ஏலங்கள் மூலம் இந்த முடியை வாங்கிக்கொள்கின்றன. இந்த முடியை வைத்து விக்குகள் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்குமாம்.
இதையடுத்து, சர்வதேச சந்தையில் ‘திருப்பதி முடி’ என்கிற பிராண்டிற்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்துள்ளது. காரணம், இந்தியர்களின் முடி அடர் கருப்பு நிற, நல்ல நீளம் மற்றும் பளபளப்பு ஆகியவற்றைக்கொண்ட இந்த முடிக்கு, லண்டன் மற்றும் பேரிஸ் போன்ற நகரங்களில் இருக்கும் ஃபேஷன் சந்தைகளில் அதிக தேவை இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் முதலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, முதலில் சேகரிக்கப்பட்டு முதற்கட்டமாக அங்கேயே சேகரிக்கப்படுகிறது. பின்னர், அது கீழ் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு தரத்தின் அடிப்படையில் முடி பிரித்து சுத்தம் செய்வதற்காக திருப்பதில் இருக்கும் ஒரு மையத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதியின் அருகில், அலிபிரியில் இருக்கும் இந்த மையத்தில் இந்த முடிகள் கொண்டு வரப்பட்டு ஆறு வகைகளாக பிரிக்கப்படுகிறது
இதில், முதல் வகைக்கு அதிக தேவையும், ஐந்தாம் வகைக்கு குறைவான தேவையும் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முடியை வைத்து நடத்தப்படும் ஏலத்தில், முதல் தர முடி ஒரு கிலோவிற்கு குறைந்தபட்சம் 72,802 ரூபாய் வரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறதாம். அதே போல ஐந்தாம் தர முடியானது, கிலோ ரூ.135க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறதாம். மொத்தமாக சுமர் 600 கிலோ முதல் தர முடி மற்றும் 2,83,000 கிலோ ஐந்தாம் தர முடி ஏலத்திற்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.