April Fools Day தொடங்கியது எப்படி? இந்த அற்புத தகவலை தெரிஞ்சிக்கோங்க..

What Is April Fools Day 2025 : ஏப்ரல் 1ஆம் தேதி April Fool’s Day கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், சிலர் சிலரை ஏமாற்றுவர் அல்லது ஏமாற்றப்படுவர். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2025, 07:01 PM IST
  • முட்டாள்கள் தினம் தொடங்கியது எப்படி?
  • April Fools என்றால் என்ன?
  • இதோ விவரம்!
April Fools Day தொடங்கியது எப்படி? இந்த அற்புத தகவலை தெரிஞ்சிக்கோங்க..

What Is April Fools Day 2025 : உலக மக்கள் அனைவருக்கும் ஒரு சில நாட்களை நன்றாகவே நியாபகம் இருக்கும். அதில் ஒன்று, ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். பலர், தங்களுக்கு நெருக்கமானவர்களை, நண்பர்களை, குடும்பத்தினரை, ஏன் ரோட்டில் சும்மா போகிறவர்களை கூட விடாமல் ஏதேனும் ஏமாற்றும் படி கூறி, "April Fool" என்று கத்துவர். இப்படி விளையாட்டுக்கு செய்யும் இந்த விஷயங்களை பலர் வேறு மாதிரி எடுத்துக்கொள்வதுண்டு. ஒரு சிலர், இதனை விளையாட்டாக மட்டும் நினைத்துக்கொண்டு சென்று விடுவர். 

Add Zee News as a Preferred Source

முட்டாள்கள் தினம் 2025:

இந்த தினம், முதலில் பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்துதான் பிற அனைத்து நாடுகளும் இதனை கடைப்பிடிக்க ஆரம்பித்தன. இதற்கு பின்னால் பல கதைகள் இருந்தாலும், குறிப்பிட்டு சொல்லும் படி சில இருக்கின்றன. அது குறித்து இங்கு பார்ப்போம்.

இந்த தினம் தொடங்கியது எப்படி?

ஐரோப்பிய நாடுகளில், ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், போப் கிரிகோரி புதிய கேலண்டரை ஏற்க வேண்டும் என அனைவருக்கும் உத்தரவிட்டார். இதன்படி, ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு கடைப்பிடிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு சிலர் தொடர்ந்து தங்களின் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். இப்படி இருப்பவர்களை ஜனவரி 1ல் புத்தாண்டு கொண்டாடி வந்தவர்கள், முட்டாள்களாக கருதி கேலி செய்தனர். இதனால், 19ஆம் நூற்றாண்டுகளில் ஏப்ரல் 1 என்றால் முட்டாள்கள் தினம் என்று பிரபலமாகிவிட்டது.

இன்னொரு கதை..

முட்டாள்கள் தினம் குறித்து பல கதைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இது. 1381ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. இந்த நேரத்தில் கிங் ரிச்சர்ட் என்பவர் ஒரு போரில் வென்றிருக்கிறார். இதையடுத்து, தான் போஹேமியா ராணியை மார்ச் 32ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்போவதாக அறிவித்திருகிறார். இதையறிந்து பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மார்ச்சில், 31 நாட்கள்தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட அவர்கள் தங்களை முட்டாள்களாக கருதினர். மார்ச்சில் 32ஆம் தேதியும் வராது என்பதை அவர்கள் அறிய தாமதமானதால் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த தினம் தோன்றியது எப்படி?

இந்தியாவில் பெரும்பாலான வெளிநாட்டினரின் பண்டிகை கொண்டாட ஆரம்பித்ததற்கு காரணம், அவர்கள் நம்மை ஆட்சி செய்து வந்த காலத்தில்தான். இதனால், ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்பதும் அப்படி வழிவழியாக வந்த நடைமுறையாக இருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். 

என்ன செய்ய வேண்டும்?

இப்போது பிறரின் மனம் புண்படும் வகையிலேயே ஏமாற்றுவது என்பது மிகவும் சுலபம் ஆகிவிட்டது. எனவே, இந்த நாளிலாவது யார் மனதையும் புண்படுத்தாமல், எதிரில் இருக்கும் நபரும் சிரிக்கும் அளவிற்கு ஏதாவது பிராங்க் செய்தால் போதுமானது.

மேலும் படிக்க | ரம்ஜான் நோன்புக்கும் அசைவ உணவுக்கும் இப்படி ஒரு தொடர்பா...உண்மையான நோக்கம்!

மேலும் படிக்க | கல்யாணத்திற்கு பின்னும்... Ex ஞாபகமாகவே இருக்கிறதா? உடனே மறக்க இந்த 4 விஷயங்களை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News