Friendship Marriage Meaning : திருமணம் ஆகாத பெண்கள் ஆண்களை பார்த்து கேட்கப்படுற முதல் கேள்வி எப்போதுமா கல்யாணம் எப்பப்பா கல்யாணம் அது மட்டும் தான். இது சமாளிப்பதுதான் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் மிகப் பெரிய தலைவலியாக இருக்கிறது. இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்க சீனாவை சேர்ந்தவர்கல் ஒரு புது ட்ரெண்ட உருவாக்கி இருக்கிறார்கள்.
திருமணத்தை தள்ளிப்போடும் இளசுகள்!
ஒரு காலத்தில் நம்ம ஊர் பெண்களுக்கு 18 வயசு ஆண்களுக்கு 23-24 என்று ஆகிவிட்டது என்றாலே கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த காலத்தில் அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் ஆண்கள் இருவருமே திருமணத்தை தள்ளி போட தொடங்கிறார்கள்.
பட்டம், மேற்படிப்பு, சொந்த தொழில் தொடங்குவதற்காக அல்லது நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பதற்காக அப்படி இல்லை என்றால், அரசு வேலை வாங்கிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என சொல்வது, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இந்த காலத்துல ரொம்பவே அதிகரித்து இருக்கிறது. மேலும் தங்களுடைய இலக்குகளை எட்டுவதற்காக திருமணம் ஒரு தடையாக இருக்க கூடாது, என்றும் திருமணத்தை தள்ளி போடும் நடைமுறை மிகவும் அதிகமாக இருக்கிறது.
ஆனாலும் கூட இந்த பெரியவர்கள் சும்மா விடுவாங்களா? சான்ஸ் கிடைத்தாலே போதும் “எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம்” என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். “காலாகாலத்துல கல்யாணம் பண்ணா தான் குழந்தைகளை பெத்துக்க முடியும்” என்று அட்வைஸ் வேறு செய்து காெண்டு இருப்பார்கள்.
ஒருவேளை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றால் கூட சுற்றி இருக்கஹடங உறவினர்கள், ஊர்க்காரர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைவரும் இந்த திருமண பிரஷரை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
“ஏன் கல்யாணம் செஞ்சிக்க மாட்ற? வயசானா மாப்பிள்ளை கிடைக்காது..” அப்படின்னு தினம் தினம் டார்ச்சர் செய்து கொண்டு இருப்பார்கள்.
பிரண்ட்ஷிப் மேரேஜ்..
இந்தப் திருமண பிரஷர் நம் ஊரில் மட்டும்தான் இருக்கிறதா? இது உலகளவில் இருக்கிறது. இந்த மாதிரியான சூழல்களை சமாளிப்பதற்காக புது ஐடியாவை சீன இளைஞர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் பிரண்ட்ஷிப் மேரேஜ்.
பரஸ்பர நம்பிக்கை நட்பின் அடிப்படையில் இந்த திருமணம் இருக்கும். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் திருமண பாரம்பரிய முறை இதில் இருக்காது. அதாவது அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் தனித்தனியாக தான் வாழ்வார்கள். இருவரும் படுக்கையறைய பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் விவரமாக சொல்ல வேண்டும் என்றால், இல்லற வாழ்க்கை கிடையாது-தாம்பத்திய உறவு இருக்காது.
பிடித்தது போன்ற வாழ்க்கை..
இவர்களின் திருமணத்தை ஆண்-பெண் இரண்டு குடும்பம் அங்கீகரித்தாலும் , சட்டம் அங்கீகரித்தாலும் அவர்கள் கணவன்-மனைவியாக இருப்பது இல்லையாம். இந்த மாதிரியான நடைமுறை முதன் முதலாக ஜப்பான் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தான் பிரபலம் ஆனது.
தற்போது, இது கொஞ்சம் விரிவடைந்து சீனர்களும் இந்த நடைமுறையை விரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் இருக்கும்போது நீங்கள் யார் கூடயாவது டேட்டிங் செல்ல வேண்டும் என்று நினைத்தால் கூட போகலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. ஒருவேளை குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், அல்லது செயற்கை கருவுறுதல் முறையை பின்பற்றி குழந்தையை பெற்றெடுத்தும் வளர்க்கலாமாம்.
இந்த பிரண்ட்ஷிப் மேரேஜ் என்று கூறப்படுகிற நட்பு திருமணம் சீனாவில் மிகவும் அதிகரித் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை மூலமாக திருமணம் சார்ந்த பேச்சு வார்த்தைகளால் தங்களுக்கு தரப்படும் அழுத்தம் குறைவதாக சீனர்கள் நம்புகின்றனர்.
அதேபோல திருமணத்துக்கு பிறகும் கூட லைஃப் பார்ட்னரால் வரும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறுகின்றனர். அதனால தங்களுக்கு பிடித்தார் போல் வாழ்க்கையை வாழ முடியுது என்று சில சீன இளைஞர்கள் பேசுகிறார்கள்.
மேலும் படிக்க | Situationship-ல் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
மேலும் படிக்க | இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









