Single Soap For Family : தனிப்பட்ட சுகாதாரம் என்பது (Personal Hygiene) மிக மிக அவசியம் ஆகும். இந்த தனி சுகாதாரத்தில், தினமும் பல் துலக்குவது, குளிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். அப்படி குளிக்கும் போது, பலர் தனக்கென தனித்தனியாக சோப்பை வைத்துக்கொள்வர். ஒரு சில இல்லங்களில் அனைவரும் ஒரே சோப்பை உபயோகிப்பர். இதனால் என்ன ஆகும் தெரியுமா?
ஒரே சோப்பை உபயோகிப்பது..
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வீட்டில் உள்ள பலரும் ஒரே சோப்பை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்போது அது கதையல்ல. பொதுமக்களுக்கு உடல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் தனித்தனியே தங்கள் உடலுக்கு ஒத்துழைக்கும் சோப்புகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இது எப்போதும் நல்லதுதான்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். இப்படி இருக்கையில், ஒரே சோப்பை பலர் உபயோகிப்பதால் அதனால் தீமைகள் மட்டுமே அதிகரிக்கும் தவிர, நன்மைகள் இல்லை.
சோப்பில் இருக்கும் நுரை:
குளியளரையில் இக்கும் சோப்பை, ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உபயோகிக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். அப்படி உபயோகித்த பின், ஒரு சிலர் அந்த சோப்பை கழுவி வைக்க வேண்டும் என்று நியாபகம் வைத்துக்கொள்வர். ஒரு சிலருக்கு அந்த நியாபகம் இருக்காது. அதன் மேல் இருக்கும் நுரையை அப்படியே கழுவாமல் வைத்து விட்டு வந்துவிடுவர். இதையடுத்து போகும் நபரும், அப்படியே சோப்பை பயன்படுத்தினால் அவருக்கு சரும நோய் பாதிப்பு ஏதேனும் உருவாகலாம்.
சோப்புக்கட்டியானது, ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும். இதையடுத்தி, இதில் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் உள்ளிட்ட கிருமிகள் அதன் மீது படரலாம். எனவே, ஒரே சோப்பை பலர் உபயோகிக்கையில், அதில் இருக்கும் நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவ, நிறைய வாய்ப்புள்ளது.
தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?
ஆளுக்கு தனித்தனி சோப்பு வாங்க முடியவில்லை என்றால், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் லிக்விட் சோப் எனப்படும் சோப்பு கரைசலை பயன்படுத்தலாம். இவை, பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துகையில் யார் கையும் படாது, சருமமும் படாது. காரணம், இவற்றை கையிலோ, உடலுக்கு தேய்க்கும் நாரிலோ சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதனால், யாருக்கும் தொற்று ஏற்படும் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது.
சோப்பை அனைவரும் உபயோகிப்பதே, உடலை சுத்தம் செய்வதற்காகத்தான். அதைத்தாண்டி, உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு, உடலில் ஒட்டியிருக்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா, கிருமிகள், எண்ணெய் பசை, நாற்றம், வியர்வை உள்ளிட்டவை போக வேண்டும் என்றுதான். ஆனால், இதை செய்யப்போக நம் தோலுக்கு ஏதேனும் கேடு வந்துவிட்டால் என்ன செய்வது?
தோல் பராமரிப்பு:
பலருக்கு சருமம் மற்றும் தோல் பராமரிப்பு குறித்த பலவிதமான எண்ணங்கள் இருக்கிறது. இதற்கு அர்த்தம் முகத்தை சோப் போட்டு கழுவுவதோ, சன் ஸ்கிரீன் மட்டும் போட்டுக்கொண்டு வெளியில் செல்வதோ இல்லை. சருமம் மீது அக்கறை கொண்டு, தரமான குளியல் சோப்பையும், பிற பொருட்களையும் உடலுக்கு உபயோகிப்பதுதான்.
மேலும் படிக்க | அழகான பெண்கள் இருக்கும் நாடுகள்! டாப்புல எந்த நாடு தெரியுமா? அப்போ இந்தியா?
மேலும் படிக்க | ஏசியில் குழந்தைகளை உறங்க வைக்கலாமா? விளக்கும் மருத்துவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









