What Will Happen If You Did Not Clean Navel : உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே முக்கியமானவை. அப்படி, முக்கியமான பாகத்துள் ஒன்று, தொப்புள். இதுவே, நமது உடலின் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக எடுத்து சொல்லும் ஒரு உறுப்பு ஆகும். தாயை விட்டு சேய் பிரிந்தாலும் கூட, அந்த உறவை பலர் ‘தொப்புள் கொடி உறவு’ என்று கூறுவர். இந்த தொப்புள் கொடியில், மூன்று ரத்தநாளங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஒன்ரு, ஆக்ஸிஜனுக்கும், கருவுக்கு ஊட்டச்சத்துகளும் கொண்டு செல்லும் கொடி நரம்பாக விளங்குகிறதாம். இப்படியிருக்கும் இந்த தொப்புளை, சுத்தம் செய்யாமல் இருந்தால் என்னவாகும் தெரியுமா?
துர்நாற்றம்:
தொப்புளில், வியர்வை, உடலில் இருக்கும் எண்ணெய், டெட் ஸ்கின் செல்ஸ் உள்ளிட்டவை தங்கும். தொப்புளை வெகு நாட்கள் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அதில் பாக்டீரியாக்கள் உருவாகி துர்நாற்றம் அடிக்கும். இதனால், நாம் எவ்வளவுதான் குளித்தாலும் அந்த நாற்றம் போகாமல் இருக்கும்.
பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகள்:
தொப்புள், பார்க்க டார்க் ஆக இருக்கும். காரணம், உங்களுக்கு வியர்வை அதிகமாக வருவதால் அது அங்கு சென்று தங்குகிறதாம். மைக்ரோப்ஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் தங்குவதற்கு இது சரியான இடமாக இருக்கும். எனவே, இந்த இடத்தை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அங்கு தொற்று ஏற்படுவதோடு, வீக்கம், வலி உள்ளிட்டவையும் ஏற்படும்.
தொப்புள் கட்டிகள்:
டெட் சரும செல்கள், எண்ணெய், அழுக்கு உள்ளிட்டவை இருப்பதால் அவை தொப்புளில் கட்டி அல்லது கல்லாக உருவாகலாம். இதனை நீக்க, மருத்துவரின் உதவியும் தேவை படலாம்.
அரிப்பு:
நீண்ட நாட்களாக தொப்புளை சுத்தம் செய்யவில்லை என்றால், அந்த இடத்தில் பாக்டீரியக்கள் உருவாகும். இதனால், அந்த சரும செல்களில் எரிச்சல், அரிப்பு உள்ளிட்ட உணர்வுகள் ஏற்படலாம். இதனால், சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
தடிப்புகள்:
சருமத்தில் தொடர்ந்து அரிப்புகள் அல்லது எரிச்சல் ஏறட்டு சொரிவதால், அந்த இடத்தில் தடிப்பு ஏற்படும். மேலும், நாம் உடுத்தும் ஆடைகள் தொப்புளின் மேல் உரசுவதால், அந்த தடிப்புகள் இன்னும் மோசமாகலாம்.
பரு அல்லது சூடு கட்டி:
தொப்புள் பகுதிக்குள் அல்லது அதற்கு அருகில் உள்ள துளைகள் அடைபட்டால் இந்த பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட சருமத்தில் பருக்கள் அல்லது கொப்புளங்கள் ஏற்படக்கூடும். மயிற்கால்களில் ஏற்படும் இவை, பல சமயங்களில் வலி மிகுந்ததாக ஆகி விடும். இவற்றை அகற்ற, அல்லது சரி செய்ய பல சமயங்களில் மருத்துவ உதவியை நாட வேண்டியதாக இருக்கும். எனவே, ஆரம்பத்திலேயே இதனை பார்த்து விட வேண்டியது அவசியம்.
திரவ வெளியேற்றம்:
ஒரு சில நேரங்களில், இந்த தொப்புள் தொற்று அதிகரிக்கும் போது ஒரு வகையான திரவ வெளியேற்றம் (Discharge) நிகழலாம். இவை, மஞ்சள், பச்சை, பிரவுன் உள்ளிட்ட நிறங்களில் வெளியேறும். இதனால் நாற்றமும் அடிக்கும். அப்படியான திரவம் வெளியேறினால் காய்ச்சல் ஏற்படலாம். அப்படி எதுவும் ஏற்பட்டால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | ட்ரிப்ஸ் போலாமா...ஜோடியாக ட்ரிப்ஸ் சென்றால் இத்தனை சலுகைகள் கிடைக்குமாம்!
மேலும் படிக்க | குழந்தைகளுக்கு காது குத்த
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சரியான வயது இது? மருத்துவர்கள் சொல்வது..









