What Will Happen If You Walk For 60 Minutes : உடற்பயிற்சிகள் அனைத்திலும், மிகவும் எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சி நடை பயிற்சி ஆகும். அது மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு எந்த உபகரணமும் தேவையில்லை. நடமாட ஒரு குறிப்பிட்ட இடமிருந்தால் மட்டும் போதும். உடலை இளமையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள, தினமும் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சியை மன தெளிவையும் அதிகரிக்கச் செய்யுமாம். தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போமா?
முதல் ஐந்து நிமிடத்தில் நடப்பது..
வாக்கிங் செய்ய ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடத்தில் உங்களது இதயத்துடிப்பு கணிசமாக உயரும். இதனால் ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும். தசைகளுக்கும் மூளைக்கு செல்லும் நரம்புக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உங்களது உடலின் ஆற்றல் அதிகமாகி கவனம் செலுத்தும் விதமும் அதிகரிக்கும்.
10-15 நிமிடங்கள்:
முதல் 10-15 நிமிடங்களில் உங்களது கால்கள் மட்டும் இடுப்பின் தசைகள் நன்றாக வேலை செய்ய தொடங்கும். இதனால் உடலுக்கு ஆக்சிஜன் ஆதிகமாகும். இதனால் நாசி வழியாக மூச்சை இழுத்து விடுவதால் உடலுக்கு ஆக்சிஜன் நடமாட்டம் அதிகரிக்கும். சிது, உங்களது தசைகளில் இருக்கும் கலோரிகளை குறைக்க செய்யும். 15 நிமிடங்கள் நடக்கும் போது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கும் சக்தி உடலுக்கு கிடைத்து விடும்.
20-30 நிமிடங்கள்:
20 முதல் 30 நிமிடங்களுக்கு காண நடைபயிற்சியை நீங்கள் எட்டியவுடன் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு, வேகமாக எரிய ஆரம்பிக்கும். அதிலும் நீங்கள் இந்த நிமிடங்களில் வேகமாக நடைபயிற்சி செய்தால் உங்கள் உடலில் இருக்கும் இன்டோர் பின்ஸ் மற்றும் டோபமைன் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்து, உங்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் குறையும். உடல் ரிலாக்ஸ் ஆவதோடு, உங்களது கவனத்திறனும் அதிகரிக்கும்.
30-40 நிமிடங்கள்:
30-40 நிமிடங்களில் உங்களது புத்தி கூர்மை அதிகமாகும். இதனால் மூளை திறன் செயல்பாடு அதிகரிக்கும் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்படி தினசரி செய்தால் உங்களது நினைவுத்திறன் அதிகரித்து, பிரச்சனைகளை தீர்க்கும் திறனும் அதிகமாகும்.
40-60 நிமிடங்கள்:
40-60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கையில் அது ஒரு மினி ஏரோபிக் உடற்பயிற்சி நிலைக்கு வந்துவிடும். இதனால் பின்பக்கம், தொடைகள், குதிகால் உள்ளிட்டவை வலுவாகும். இதனால் இன்சுலின் அளவு அதிகரித்து உங்கள் உடல் சுகர் லெவலை கட்டுப்படுத்தும். இதனால் டைப் 2 டயாபடீஸ் வராமல் தடுக்கலாம் என கூறப்படுகிறது.
50-60 நிமிடங்கள்:
இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது உங்களது இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இதனால் இதயத்தை சுற்றி இருக்கும் தசைகள் வலுவாவதோடு, உடலுக்கும் வழி சேர்க்கும். இதன் பிறகு சில வெயிட் லிப்டிங் உடற்பயிற்சிகளை செய்தால் எலும்பு தொடர்பான நோய் பாதிப்புகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதனை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.)
மேலும் படிக்க | நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!
மேலும் படிக்க | காலை நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









