PF Withdrawal : பிஎப் தொகையை நீங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், எப்போதெல்லாம் எடுக்கலாம்? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

PF Withdrawal : எந்தவொரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் பிஎப் கட்டாயம் இருக்கும். அதாவது பணியாளர்களின் ஓய்வூதிய காலத்துக்கான சேமிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகை, உண்மையிலேயே ஊழியர்களுக்கு பல்வேறு வகையிகளில் பயனளிக்கிறது. புரொவிடென்ட் ஃபண்ட் (PF) என்பது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டமாகும். இதை EPFO நிர்வகிக்கிறது. 2024-25 நிதியாண்டில், EPFO, PF கணக்குகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
PF திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
PF கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது.ஊழியர் தனது அடிப்படை சம்பளம் + DA இல் 12% பங்களிக்கிறார். முதலாளியும் 12% பங்களிக்கிறார்.இதில் 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) செலுத்தப்படுகிறது. மாத வருமானம் ₹15,000 வரை உள்ள ஊழியர்களுக்கு PF கட்டாயம். ₹15,000 க்கு மேல் உள்ளவர்கள் கூடுதல் தொகையைகூட பிஎப் திட்டத்தில் சேமிக்க முடியும்.
PF தொகையை எப்போது எடுக்கலாம்?
பொதுவாக பிஎப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் 58 வயது பூர்த்தியடைந்திருந்தால் ஓய்வூதிய பலன்களுக்காக எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒருவேளை தொடர்ச்சியான வேலையின்மை இருக்கும்போது முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர உடல்நிலை பிரச்சினைகள் சிகிச்சைக்காக முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பகுதியாகவும் எடுத்துக்கொள்ளலாம். வீடு கட்டுதல்/வாங்குதல், கல்வி, திருமணம், மருத்துவ அவசரநிலை காரணங்களுக்காக இந்த சேமிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். 1 மாத வேலையின்மை இல்லையென்றால் கூட 75% தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
PF தொகையை எப்படி எடுப்பது?
- ஆன்லைன் அப்ப்ளிகேஷன் EPFO போர்ட்டல் வழியாக எடுக்கலாம்
- அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் UAN எண், பாஸ்வேர்டு போட்டு லாகின் செய்யவும்
- "Online Services" → "Claim (Form-31, 19, 10C)", வையான படிவத்தை நிரப்பவும்.
- அதிகபட்சம் ஒருவாரத்துக்குள் பிஎப் பணம் உங்கள் வங்கி கணக்குக்கு வந்துவிடும்
- 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படும்
- 5 வருடங்களுக்குப் பின்: வரி விலக்கு கிடைக்கும், 80C கீழ் ₹1.5 லட்சம் வரை எடுக்கலாம்
- ஆண்டு ₹2.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைபவர்களுக்கு வரி விதிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ