)
White Hair Remedy in Tamil: இளம் வயதிலேயே முடி நரைப்பது ஒரு சாதாரண பிரசக்கையாக மாறி வருகிறது. அதை மறைக்க நாம் பல ரசாயன கலந்த ஹேர் டையை பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இந்த ரசாயன ஹேர் டை உங்கள் தலைமுடியை இன்னும் வேகமாக சேதமடையச் செய்யும். முடி உடைவதற்கும், வேர்களில் இருந்து முடி உதிர்வதற்கும் ரசாயன நிறங்களும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஹேர் டையைப் பயன்படுத்தாவிட்டால், உங்கள் தலைமுடி கருப்பாக மாறாது என்பதல்ல. உங்கள் தலைமுடி நரைப்பதைப் போக்கவும், எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத சில வீட்டு வைத்தியங்களை முயற்சித்தால் போதும். அவை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
முடியை கருமையாக்க, இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து சூடாக்கிக் கொள்ளவும், பின்னர் எண்ணெயை குளிர்விக்கவும். எண்ணெய் குளிர்ந்ததும், அந்த எண்ணெயை உங்கள் தலைமுடியின் வேர்களில் தடவி நன்றாக மசாஜ் செய்துக் கொள்ளவும், பின்னர் இந்த எண்ணெயை இரவு முழுவதும் அப்படியே வைக்கவும், வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம். சில நாட்களுக்குள், உங்கள் தலைமுடி நரைப்பது மறைந்துவிடும், மேலும் முடி உதிர்வும் குறைந்துவிடும்.
காபி இயற்கையாகவே முடியை கருமையாக்க உதவும்
காபி இயற்கையாகவே முடியை கருமையாக்க உதவும். காபி ஒரு ஆற்றல் பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் காபி உங்கள் வெள்ளை முடியை கருமையாக்க உதவும் என்று பலருக்கு தெரியாது. இதற்காக, முதலில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நான்கு டீஸ்பூன் காபி பொடியைச் சேர்க்கவும். பின்னர் அந்த தண்ணீரை குளிர்வித்து உங்கள் தலைமுடியில் தடவி, சுமார் 1 மணி நேரம் கழித்து கூந்தலை கழுவவும்.
தேயிலை, மஞ்சள் மற்றும் இண்டிகோவை மருதாணியில் கலந்து பயன்படுத்துங்கள்
தேயிலை, மஞ்சள் மற்றும் இண்டிகோவை கலந்து மருதாணியில் பயன்படுத்தினால், வெள்ளை முடி கருப்பாக மாறத் தொடங்கும். நல்ல மருதாணி படி மற்றும் இண்டிகோ பொடியை சம பாகங்களாக எடுத்துக் கொள்ளவும், அதனுடன் மூன்று டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து தேயிலை நீரில் கலந்து தலைமுடியில் தடவவும். இரண்டு மணி நேரம் கழித்து முடியைக் கழுவினால், உங்கள் வெள்ளை முடி கருப்பாகத் தோன்றும். இது சுமார் 20 நாட்கள் வரை நீடிக்கும். பின்னர் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும், முடி கருப்பாகவும், பளபளப்பாகவும், இயற்கையாகவே வலுவாகவும் மாறத் தொடங்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ