Why do we apply Kumkum on the forehead In Tamil: குங்குமம் இந்துப்பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடி. இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டபடுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி . இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றி பகுதியில் குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
குங்குமம் இட்டால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஹார்மோன்கள் சீராக தூண்டபடுகிறது.
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள நன்மைகள் இங்கே அறிந்துக்கொள்ளலாம்:
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அதில் ஸ்ரீ மகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
வீட்டிலேயே இயற்கையாக குங்குமம் தயாரிப்பது எப்படி?
பொதுவாக குங்குமத்தைக் கடைகளில் வாங்கியே பயன்படுத்துவோம். ஆனால் இனி இயற்கை சார்ந்த பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே குங்குமம் தயாரித்து பயன்படுத்தலாம். முதலில் மூன்று எலுமிச்சை எடுத்துக் கொண்டு அதை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் மஞ்சள் தூளுடன், வெண்காரம், படிகாரம் சேர்த்து நன்றாக கலக்கவும். தூள் பதத்துக்கு மட்டும் பிசைந்துகொள்ளவும். கலந்து வைத்த தூளை சிறிது நேரம் அப்படியே ஆறவிடவும். எலுமிச்சை சாற்றின் ஈரப்பதம் குறைந்ததும் 8 டீஸ்பூன் நல்லெண்ணெய், அல்லது தூளாக இருப்பதற்குத் தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்தக் கலவையை இரண்டில் இருந்து மூன்று நாள்களுக்கு வெயிலில் நன்கு காயவைக்கவும். பின் இதை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அடிப்பது ஓர் ஒழுக்க வழி? இல்லையா?
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் கைமுழுவதும் வளையல் அணிவது ஏன் முக்கியம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ