லிஃப்டிற்குள் கண்ணாடி இருப்பது ஏன்? அழகு பார்ப்பதற்கல்ல..மேட்டரே வேற..

Why Do Lifts Have Mirror : நாம் பல நேரங்களில், லிஃப்டிற்குள் கண்ணாடி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அது எதற்காக இருக்கிறது என்பது குறித்து கேட்காமலேயே இருந்திருப்போம். அந்த காரணம் குறித்து இங்கு பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2026, 04:32 PM IST
  • லிஃப்டில் கண்ணாடி இருப்பது ஏன்?
  • காரணம் இதுதான்!
  • முழுசா தெரிஞ்சிக்கோங்க..
லிஃப்டிற்குள் கண்ணாடி இருப்பது ஏன்? அழகு பார்ப்பதற்கல்ல..மேட்டரே வேற..

Why Do Lifts Have Mirror : பெரிய பெரிய அடுக்குமாடிகளில்,  குடியிருப்புகளில், மருத்துவமனைகளில் என பல மாடி கட்டிடங்கள் இருக்கும் பல இடங்களில் மின் தூக்கி எனப்படும் Lift வைக்கப்பட்டு இருக்கும். அந்த லிஃப்டிற்குள் ஏறும் போது, நம்மில் பலருக்கு கண்ணாடியை பார்த்து “தோற்றம் அழகாக இருக்கிறதா? உடை சரியாக அணிந்திருக்கிறோமா?” என சரிபார்த்துக்கொள்ள உதவும். ஆனால், இந்த கண்ணாடிகள் அழகு பார்க்க மட்டும் வைக்கப்படவில்லை. அதற்கு பின்னால் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

Add Zee News as a Preferred Source

லிஃப்ட் வரலாறு:

உலகெங்கிலும் பல உயரமான கட்டடங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில், இந்த லிஃப்ட்கள் இயக்கப்பட்ட போது இப்போது இருப்பது போல வேகமாக எல்லாம் செயல்படவில்லை. மெதுவாகவே செயல்பட்டன. இதனால், லிஃப்டில் பயணம் செய்பவர்கள், இதனால் நேரம் அதிகம் செலவாவதாகவும், இது தங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாகவும் தங்களது நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இவர்களின் புகார்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அதன் வேகத்தை சீக்கிரத்தில் அதிகரிப்பது என்பது கடினமான காரியமாக இருந்தது. அவர்கள் அந்த லிஃப்டின் வேகத்தை மாற்ற நினைத்தாலும் அதன் வேகத்தை அதிகரிப்பது என்பது பல தொழில்நுட்ப சிக்கல்களையும், பெரும் பொருட்செலவையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது.

லிஃப்ட் கண்ணாடிகளுக்கு பின் இருக்கும் காரணம்!

லிஃப்டை உபயோகிப்பவர்களின் குறையை தீர்க்க, பொறியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை செய்ய நினைத்தனர். அப்படி அவர்கள் செய்ததுதான், லிஃப்டின் சுவர்களில் கண்ணாடியை பொருத்தினர். லிஃப்டில் பயணிப்பவர்கள், தங்களை கண்ணாடியில் பார்ப்பது, ஆடைகளை சரி செய்வது என பிற சில விஷயங்களின் மூலம் கவனத்தை சிதற விட ஆரம்பித்தனர். இதனால் அவர்கள் தங்களின் பயண நேரம் குறைவது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. புகார்களும் குறைய ஆரம்பித்தது. இயந்திரத்தை மாற்றாமலேயே, அவர்கள் இந்த உளவியல் தந்திரம் மூலமாக மக்களின் பிரச்சனைகள் சுலபமாக தீர்க்கப்பட்டது.

பயத்தை போக்க..

பலருக்கு சிறிய அறையில், இருப்பதற்கு பயம் ஏற்படும்.  இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதற்கு ஆங்கிலத்தில் Claustrophobia என்று பெயர். லிஃப்டும், நான்கு சுவரு கொண்டிருக்கும் சிறிய இடம் கொண்ட பகுதிதான். அங்கு இருக்கும் போதும், பலருக்கு அந்த Claustrophobia எனப்படும் பயம் ஏற்படும். அந்த பயம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அந்த சிறிய அறையை மிகவும் அகலமாகவும், பெரிதாகவும் காட்டுவதால் மக்களுக்கு ஏற்படும் மனப்பதற்றம் குறைக்கப்படும்.

இன்னொரு காரணம்..

சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் பலர், லிஃப்டுக்குள் செல்வார்கள். அதில் சிலர், தனியாகவே வீலை தள்ளிக்கொண்டு செல்வார்கள். அவர்கள் பின்னால் திரும்பும் போதும், முன்னால் செல்லும் போதும் சரியாக பார்த்து செல்வதற்காகவும் கண்ணாடிகள் வைக்கபப்ட்டுள்ளன. ஜப்பான் உள்பட சில நாடுகளில் லிஃப்டில் கண்ணாடி வைப்பது என்பது சட்டப்பூர்வமான விதியாகவே இருக்கிறது. 

பாதுகாப்பு..

பலர், பொது இடங்களில் இருக்கும் லிஃப்டை உபயோகிக்கும் போது தங்களின் உடைமைகளை களவு கொடுக்க நேரிடலாம். இதை தவிர்க்கவும் இந்த லிஃப்ட் கண்ணாடிகள் பயன்படும். நீங்கள் பேக் மாட்டிக்கொண்டு இருக்கும் போது உங்களுக்கு பின்னால் இருப்பவர் எதையாவது எடுக்கிறாரா, அல்லது அவர் என்ன செய்கிறார் என்பதை இந்த கண்ணாடிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால், பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுவதும், குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமும் கணிசமாக குறையும்.

மேலும் படிக்க | சிலிண்டர் விலையில் ரூ.300 அதிரடி குறைப்பு: மக்களுக்கு அரசின் சூப்பர் செய்தி

மேலும் படிக்க | வெறும் 10 நாட்களில் காஷ்மீர் முதல் கோவா வரை! IRCTC அதிரடி சலுகை - முழு விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News