அசிங்கமான மஞ்சள் பற்கள் முத்து போல ஜொலிக்க வீட்டு வைத்தியங்கள்

Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்கள் நமது தோற்றத்தை கெடுப்பதுடன், பற்களின் ஆரோக்கியத்திலும் சில பிரச்சனைகளை ஏற்படும். எனவே வீட்டு வைத்தியம் மூலம் இதற்கான தீர்வு பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2025, 07:58 PM IST
  • பற்களை வெண்மையாக்கும் இந்த பொடியை எவ்வாறு பயன்படுத்துவது?
  • பற்களை சுத்தம் செய்ய வேப்பங் குச்சி அல்லது தூளைப் பயன்படுத்துங்கள்.
  • கொப்பளிக்க வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பைப் பயன்படுத்தலாம்.
அசிங்கமான மஞ்சள் பற்கள் முத்து போல ஜொலிக்க வீட்டு வைத்தியங்கள்

Teeth Cleaning Tips: நம் பற்கள் மஞ்சளாக இருந்தால் முகத்தின் அழகில் பிரதிபலிக்கும். பல நேரங்களில், மஞ்சள் பற்கள் காரணமாக, நாம் வெளிப்படையாக சிரிக்க முடியாமல் போகிறது, மேலும் சில காரணத்தால் பற்கள் தெரிய ஆரம்பித்தால், நாம் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் பற்களை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், பற்களில் மஞ்சள் அடுக்குகள் சேர ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் நாம் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது அவசியமாகும். ஆனால் பலர் இதை பின்பற்றுவதில்லை. இருப்பினும், தற்போது ஒரு எளிய வீட்டு வைத்தியம் மூலம் உங்களின் பற்களை வெண்மையாக மாற்றலாம்.

பற்களை வெண்மையாக்கும் பொடியை  வீட்டில் தயாரித்து பயன்படுத்துங்கள்:
உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக மாறி, அதிக முயற்சிக்குப் பிறகும் வெண்மையாக மாறவில்லை என்றால், வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் பொடியைத் தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு உங்களுக்கு ஒரு ஸ்பூன் கிராம்பு தூள், ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் அதிமதுரம் தூள், ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், உலர்ந்த வேப்பம்பூ மற்றும் புதினா இலைகள் தேவைப்படும். இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பற்களை வெண்மையாக்கும் இந்த பொடியை எவ்வாறு பயன்படுத்துவது?
பற்களை வெண்மையாக்கும் பவுடரை பல் துலக்கும் போது தடவி, மெதுவாக பற்களில் தேய்த்து, பின்னர் கழுவவும், இது உங்கள் பற்களுக்கு மீண்டும் பளபளப்பைக் தருவதுடன், துவாரங்களிலிருந்தும் காப்பாற்றும். உங்களின் பற்கள் சரியாக சுத்தமாகவில்லை என்றால், இந்த செயல்முறையை தொடர்ந்து செய்யவும்.

நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- காலையில் எழுந்ததும், அதேபோல் இரவு தூங்குவதற்கு முன்னர் கட்டாயம் பிரஷ் செய்யவும். 
-சாப்பிட்ட பிறகு உங்கள் வாயை நன்றாக கொப்பளிக்கவும். இது உங்கள் பற்களில் ஏற்படும் அடுக்கை உருவாக்காமல் தடுக்க உதவும்.
-கொப்பளிக்க வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பைப் பயன்படுத்தலாம்.
- பிரஷ் மெதுவாக தேய்க்கவும், அதிகமாக அழுத்தம் கொடுத்தால் ஈறுகள் பலவீனம் ஆகலாம்.
- பற்களை சுத்தம் செய்ய வேப்பங் குச்சி அல்லது தூளைப் பயன்படுத்துங்கள்.
- இரண்டு பற்களுக்கு இடையில் அழுக்கு படிந்திருந்தால், பல் ஃப்ளாஸைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

இந்த வீட்டு வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்:

பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்- பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட்டை தயாரிக்கலாம். 

எலுமிச்சை தோல்கள்: எலுமிச்சை தோல்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை பற்களின் வெளிப்புற அடுக்கில் உள்ள மஞ்சள் நிறத்தைக் குறைக்கும். 

தேங்காய் எண்ணெய்: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்கப் பயன்படுகிறது. பற்களின் மூலைகளில் சிக்கியுள்ள அழுக்குகளை நீக்கும் இந்த எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்யலாம். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மூட்டு வலி முதல் முதல் கொலஸ்ட்ரால் வரை... சுவையான பீட்ரூட் ராகி மில்க் ஷேக்... ரெசிபி இதோ

மேலும் படிக்க | உடலில் உள்ள யூரிக் அமில அளவை குறைக்க... இந்த பானங்களை குடிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News