திமுக கூட்டணியில் இருந்தால்தான்... காங்கிரஸ் சட்டமன்றம் வர முடியும் - சொல்வது அமைச்சர் ரகுபதி

DMK Congress Alliance: திமுகவோடு கூட்டணி வைத்தால்தான் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வர முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும் என அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2026, 07:04 PM IST
  • திமுக கூட்டணியில் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் அந்தஸ்து - ரகுபதி
  • நாங்கள் யாரையும் உதாசீனப்படுத்தமாட்டோம் - ரகுபதி
  • விரைவில் கூட்டணி உறுதியாகும் - ரகுபதி
திமுக கூட்டணியில் இருந்தால்தான்... காங்கிரஸ் சட்டமன்றம் வர முடியும் - சொல்வது அமைச்சர் ரகுபதி

DMK Congress Alliance Latest News Updates: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (மார்ச் 3) மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறித்தும் அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source

அதிமுக vs திமுக 

அப்போது பேசிய அவர், "அதிமுகவில் கூட்டணி என்பது குறைந்த கட்சிதான். அவர்கள் பேச்சுவார்த்தை ஆரம்பித்து இன்னும் எண்ணிக்கையை தொடங்கவில்லை. அதிமுகவும் பாஜகவும் எவ்வளவு தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த முடிவுக்கே இன்னும் வரவில்லை. அந்த கூட்டணியில் யார் மேஜர் பார்ட்னர்?, யார் மைனர் பார்ட்னர்? என்பது குறித்து இழுபறி நிலவுகிறது. அவர்களையும், திமுக கூட்டணியும் ஒப்பிட்டு பேசக்கூடாது.

அரசியல் அந்தஸ்து  

திமுக தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தையில் சரியான பாதையில்தான் சென்று கொண்டுள்ளார். நாங்கள் யாரையும் உதாசீனப்படுத்தமாட்டோம், விரைவில் கூட்டணியை அவர் உறுதி செய்வார். காங்கிரஸ், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுவது என்பது கப்சா. திமுக கூட்டணியில் இருந்தால் அரசியல் அந்தஸ்து என்பது கிடைக்கும் என்பது அனைவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். அதை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். 

தவெக - காங்கிரஸ்

திமுகவோடு கூட்டணி வைத்தால்தான் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வர முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். தமிழக வெற்றி கழகத்திடம் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அதனால் காங்கிரஸ் வந்தால் நல்லது என்று கூறி அவர்கள் வேல்யூ தெரிந்திருக்கலாம். ஆள் இல்லாத வீடு, காங்கிரஸ் என்றில்லை அங்கு யார் வந்தாலும் கொண்டாடப்படுவார்கள்" என திமுக - காங்கிரஸ் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பணத்தை கொடுத்து வாக்கு வாங்க முடியாது...

தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு திட்டங்களின் பயனாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டும், சிறப்பு தொகையாகவும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், "தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கவில்லை எந்த தொகை கொடுத்தாலும் அது மக்களுக்கு தான் போய் சேர்கிறது. பணத்தை கொடுத்து தற்போது யாரும் வாக்குகளை வாங்க முடியாது. ஏற்கனவே மக்கள் யார் ஓட்டு போட வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்திருப்பார்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க முடியாது, சாதனையை சொல்லித்தான் ஓட்டு வாங்க முடியும். திமுகவின் சாதனைகள் மக்கள் மனதில் உள்ளது. அதன் மூலமாக வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது" என்றார்.

திமுக களத்தில் முன்னணியில் உள்ளது

மேலும் தொடர்ந்து அதில், "அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்பதற்காக தான் தற்போது நாங்கள் போராடுகிறோம். மோடி பகல் கனவு வேண்டுமானால் காணலாம், எங்களுடைய கனவு நிஜமானது, உண்மையான கனவு 200, நிச்சயம் படைப்போம் வரலாறு, அது தமிழகத்தில் சரித்திரத்தின் வரலாறு. திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்கனவே முந்தி செயல்பட்டு வருகிறது. நாங்கள் இரண்டு முறை வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்துவிட்டோம். 

பாரம்பரியமாக திமுகவில் இருப்பவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றுபவர்கள். திமுக தலைமை வந்தாரை வரவேற்கும் தலைமை. எனவே தான் அதிமுகவில் இருந்து வந்தவர்களையும் நாங்கள் அரவணைத்துக் கொள்கிறோம். அவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்படும்.

பாஜகவின் குற்றச்சாட்டுகளை நம்ப மாட்டார்கள்

டெல்லியில் மதுபான ஊழல் என்று கூறி அரசையே கலைத்தனர். ஆனால் தற்போது என்னவாயிற்று. இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்துவிட்டனர். 
ஆட்சி அதிகாரம் தங்களுடைய கையில் இருப்பதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்து வருகின்றனர். பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது மிக மிக வல்லமையான கட்சி பாஜக. அவர்களின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

'நீதிமன்றம் என் மீது குற்றஞ்சாட்டவில்லை'

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என் மீது நீதிமன்றம் எந்த விதமான குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. நீதிமன்றம் தீர்ப்பை மதிப்பது என்பதும் நடைமுறைப்படுத்துவது என்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகன் கடமை. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு என்பது நீதிமன்றம் தான். நீதிபதி தீர்ப்பு சரியாக இருக்கிறதா?, தவறாக இருக்கிறதா? என்பது குறித்து விவாதிக்க முடியாது. 
மேல் முறையீடு வேண்டுமானால் செய்யலாம், உச்ச நீதிமன்றம் சொல்வதுதான் இறுதி முடிவு.'

திமுக தனி மெஜாரிட்டியை பெறும்...

திமுக தனி மெஜாரிட்டி குறிப்பாக, 120 இடங்களை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 
இருப்பினும் கூட்டணி கட்சிகளை மதித்து அவர்களையும் அரவணைத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து செல்வோம். தனிப்பட்ட முறையில் ஆட்சியைப் பிடிக்கக் கூடிய அளவிற்கு திமுக வலிமை உள்ளது. இந்த தேர்தலில் எங்களுக்கு எந்த சவாலும் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் அகம்பாவத்தில் இதை கூறவில்லை, எது வந்தாலும் நாங்கள் அதை சமாளிப்பதற்கு தயாராக உள்ளோம்" என்றார். 

மேலும் படிக்க | திமுக - காங்கிரஸ்: தூது வந்த ப.சிதம்பரம்... அடம்பிடிக்கும் ராகுல் - ஸ்டாலினின் முடிவு என்ன?

மேலும் படிக்க | ஒரு குடும்பத்துக்கு ரூ. 8000! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போல் முதலமைச்சரின் அடுத்த சர்ப்பிரைஸ்

மேலும் படிக்க | வங்கி கணக்கில் ரூ. 4000.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News