2021 சட்டமன்ற தேர்தலில் உதவியது போல 2026லும் உதவுங்கள் என்றும் மோடி மற்றும் அமித்ஷாவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் திருப்பறங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட திருச்சி சிவா கூறினார்.

மதுரை சிந்தாமணியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை பெருமக்களே 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற உங்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிடும் கிருத்திகா தங்க பாண்டியனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஆதரவு கேட்டு வந்துள்ளேன். மற்ற இடங்களிலும் பேசுவதைக் காட்டிலும் இது பேசுவது சிறு அச்சம் ஏற்படுகிறது. பக்கத்திலே கலைஞர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நேற்றைக்கு முன்தினம் டெல்லியிலே எதிர்க்கட்சிகள் எதிர்த்து வெற்றி பெற்றதை பின் உங்களை சந்திக்க வந்துள்ளேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி அண்ணன் ஸ்டாலினை போற்றி நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சட்டமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்ய மசோதாவை கொண்டு வந்தனர். அத்தோடு மகளிர்க்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற மசோதா ஏற்கனவே உள்ளது.
2003இல் கொண்டு வரப்பட்ட மசோதா இந்த ரெண்டு மசோதாக்களை இணைத்து பாஜகவினர் சாமர்த்தியமாக மறு சீரமைப்பு என கொண்டுவர திட்டம் தீட்டினர். அதை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 543 இடங்களில் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதுமானது. ஆனால் மத்திய பாஜக நயவஞ்சகமாக பாராளுமன்றத்தில் 800 இடங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ஜனநாயக நாட்டில் மக்களுக்கு ஒரு கடமை உள்ளது. அரசாங்கத்திற்கும் ஒரு கடமை உள்ளது. உங்களுடைய கடமை என்பது நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமையை என்பது மக்களுக்கு எது நல்லது என்பதை தேடிப் பார்த்து செய்ய வேண்டும். 2021ல் தளபதி ஸ்டாலின் ஆட்சியை அமைய மக்கள் நீங்கள் உதவி செய்தீர்கள். 5 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின் மீண்டும் உங்களை தேடி வந்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுனரை இறக்கிவிட்டு என்னை ஓட்டுவதாக வைத்து ஓட்டு கேட்டால் நியாயமா பேருந்தில் பயணம் செய்கிறவர்களுக்கு நல்ல ஓட்டுநர் தான் தேவை. நான் அந்த வேலை செய்கிறேன், இந்த வேலை செய்கிறேன் என்று கூறுவது தவறு. நாடாளுவோருக்கு நல்ல தலைவன் மக்களை நடத்துவதற்கு தலைவன் தான் தேவை அவர்தான் முதல்வர் ஸ்டாலின்.
50 ஆண்டுகளுக்கு மேல் ஊருக்காக உழைத்து மக்களுக்கு உழைத்து அவசர காலத்தில் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவித்தார். 50 ஆண்டு காலம் அவரோடு பயணம் செய்வது எனக்கு பெருமை. ஒரு சிறந்த ஆட்சி தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. நடுநிலையாளர்கள், பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன் 1920 லிருந்து தேர்தல் நடைபெற்றது. 1950ல் நாடு குடியரசாக அறிவித்த பின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது எழுதிய அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஆகியோர் 21 வயதான அனைவருக்கும் வாக்கு என கொண்டு வந்தனர் அதை ஒரு சிலர் எதிர்த்தனர்.
இரு தலைவர்களும் சேர்ந்து நாட்டில் உள்ள ஏழை மக்களின் வீடுகளில் சென்று வாக்கு கேட்க வேண்டும். அனைவரும் சமம். அதனால் தான் இந்த சட்டம் கொண்டு வந்தோம் என நினைக்கிறேன். எல்லா கட்சிகளுக்கும் எல்லா தலைவர்களுக்கும் வாக்கு கேட்டு வரும் உரிமை உண்டு நீங்கள் எழுதுவது தான் தீர்ப்பு. உங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியில் அமர முடியாது. அனைவருக்கும் சமமான இடம் எது என்று கேட்டால் வாக்குச்சாவடி மட்டுமே. ஏழை பணக்காரர் படித்தாவர் படிக்காதவர் என யாராக இருந்தாலும் அரசியல் என்று வாக்களிக்க வேண்டும் அங்கு சமத்துவம் மட்டுமே உள்ளது.
தேர்தலை திருவிழா என்கிறார்கள் தேர்தல் என்பது வாக்குசாவடியில் போய் நிற்கின்ற ஒரு நிமிடம். தேர்தல் தான் அடிக்கட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் கையெடுத்து விடியல் பயணம் திட்டத்தில்தான். ஏழை மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்ய அரசாங்கம் குறைத்து. அண்ணா சொன்னதைப் போல பொது வாழ்விற்கு வந்தவர்கள் மக்களோடு வாழ வேண்டும். கிருத்திகா உங்களோடு சேர்ந்து ஒருவராக உழைத்துக் கொண்டிருக்கிறார். பெண்கள் வீட்டில் தங்களின் சின்ன சின்ன தேவைகள் நிறைவு செய்ய உரிமை தொகை உங்களுக்கு உதவுகிறது.
இந்தியாவிலேயே உள்ளாட்சியில் 50% விழுக்காடு பெண்களை தேர்வு செய்தது தமிழக மட்டுமே அதுவும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மட்டுமே பொருளற்றவர்களின் குரலாக நாதியவற்றவர்களின் துணையாக செயல்படும் அரசாக செயல்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் கடன் உதவி கேரண்டி இல்லை தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணையாக இருக்கும். பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் எவ்வளவு அல்லல் பெற்றீர்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் பெற்ற சலுகைகளை எண்ணி பாருங்கள். எல்லோரும் நலமுடன் நிம்மதியாக வாழ மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் இருந்து வருபவர்கள் யாரையும் தரக்குறைவாக பேச மாட்டார்கள்.
உங்களிடம் காசு பணம் கேட்டு வரவில்லை, ஒரே ஓட்டு உதயசூரியனுக்கு, நாடும் மக்கள் நலமுடன் இருப்போம். மோடியையும் அமித்ஷாவையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். வெற்றி விழாவிற்கு வருகின்றேன். இன்னும் விரிவாக பேசுவோம் என மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!