மதுரை மத்திய தொகுதியில் கடும் போட்டி.. PTR பழனிவேல் தியாகராஜனை வீழ்த்துவாரா சுந்தர் சி?

PTR Palanivel Thayagarajan vs Sundar C: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) மற்றும் புதிய நீதி கட்சி சார்பாக களமிறங்கி உள்ள சுந்தர் சி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Written by - R Balaji | Last Updated : Apr 9, 2026, 11:46 AM IST
  • மதுரை மத்திய தொகுதி சிட்டிங் எம்எல்ஏ பிடிஆர் மற்றும் சுந்தர் சி போட்டியிடுகின்றனர்
  • இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும்
  • வெல்லப்போவது யார்? திமுகவின் கோட்டையாக இருக்கும் மதுரை மத்தி கைமாறுமா? முழு விவரம்
மதுரை மத்திய தொகுதியில் கடும் போட்டி.. PTR பழனிவேல் தியாகராஜனை வீழ்த்துவாரா சுந்தர் சி?

TN Assembly Election: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களின் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 234 தொகுதிகளில் சில தொகுதிகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியும் ஒன்றாக உள்ளது. காரணம் இங்குள்ள வேட்பாளர்கள்தான். ஆளும் கட்சி திமுகவின் சார்பாக பழனிவேல் தியாகராஜன் (PTR) மற்றும் அதிமுக (NDA) கூட்டணியில் இருக்கும் புதிய நீதி கட்சி சார்பாக இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முஸ்தப்பா, நாம் தமிழர் கட்சியின் சார்பாக அப்துல் ஹக்கிம் என்பவரும் போட்டியிருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

இப்படி முக்கிய வேட்பாளராக 4 கட்சிகளில் இருந்து போட்டியிட்டாலும், திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) மற்றும் புநிக வேட்பாளர் சுந்தர் சி இவர்களுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக கோட்டை மதுரை மத்திய தொகுதி 

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி இதுவரை திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக பழனிவேல் தியாகராஜனே எம்எல்ஏ-வாக இருந்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பழனிவேல் தியாகராஜன் 64,662 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஜெயபால் என்பவரை 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், பழனிவேல் தியாகராஜன் 73,205 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜோதி முத்துராமலிங்கம் 39,029 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதுமட்டுமல்லாமல், திமுக 2006, 2001 போன்ற ஆண்டுகளிலும் திமுகவே மதுரை மத்திய தொகுதியை ஆண்டு வந்துள்ளது. இதனால் இத்தொகுதி திமுகவின் கோட்டையாகவே உள்ளது. 

பிடிஆர் vs சுந்தர்சி 

மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் சுந்தர் சி, பழனிவேல் தியாகராஜனை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் பிரச்சாரம் செய்யும் போது, இத்தொகுதிக்கு நிறைய செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. என்னை தடுத்தனர் என கூறினார். பிடிஆர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு சுந்தர் சி, அவரை தடுத்தது யார்? அப்படி கட்சியில் இருந்து தடுத்தால் அவர் ஏன் திமுகவில் உள்ளார். வெளியேற வேண்டியதான என கூறினார். மேலும், 10 ஆண்டுகளாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நிதி அமைச்சராக இருந்த அவர் மத்திய தொகுதியில் மோசமான சாலைகள், கழிவுநீர் பிரச்சனை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு முறையான கழிவறை வசதி கூட ஏற்படுத்திதரவில்லை என குற்றம்சாட்டினார். 

அதேசமயம் சுந்தர் சி இப்படி பேசுகிறார் என கேட்கும்போது, பிடிஆர் சில நேரங்களில் பதில் அளிக்கிறார். சில நேரங்களில் பெரிதாக பதில் கூறாமல் நிராகரித்து செல்கிறார். இப்படி இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருவதால், இவர்கள் பேசும்பொருளாக இருந்து வருகின்றனர். 

பிடிஆர் பலன் என்ன? 

பிடிஆர் மதுரை சேர்ந்தவர். அவரது தந்தையும் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அப்போதைய மெட்ராஸ் மகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். தற்போது பிடிஆர் திமுகவில் இருந்து வருகிறார். நன்கு படித்தவர். மதுரையில் மிகவும் பிரபலமானவர். அதை தாண்டி கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவருக்கென மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவை அனைத்தும் பிடிஆருக்கு பிளஸாக உள்ளது. அதனால் இம்முறையும் அத்தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுந்தர் சி பலம் என்ன? 

சுந்தர் சி திரையுலகில் மிகவும் பிரபலமானவர், அவர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பயணித்து வருகிறார். பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து வரும் இவருக்கு ரசிகர்களும் உள்ளனர். இப்படி சுந்தர் சி ஒரு பிரபல முகமாக இருப்பதால், அவர் நல்ல வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் இரட்டை இலைக்கு என தனி வாக்கு வங்கி உள்ளது. சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனாலும் அவர் அதிக வாக்குகளைபெறுவார் என கூறப்படுகிறது. 

கள நிலவரம் என்ன? 

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி 1957 ஆம் ஆண்டு உருவானது. இத்தொகுதியில் இதுவரை 7 முறை திமுகவும், 4 முறை காங்கிரஸும், ஒரு முறை அதிமுகவும் வென்றுள்ளன. இத்தொகுதியில், 6 மாதத்திற்கு ஒரு முறை தனது எம்எல்ஏ பணிகளை அறிக்கையாக சமர்பிக்கும் வழக்கத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொண்டுள்ளார். இந்த நிலையில், பிடிஆர் மூன்றாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார். இம்முறையும் வென்று ஹட்ரிக் வெற்றியை பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கத்தை விட 2026 சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சுந்தர் சி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

மேலும் படிக்க: Puducherry Election | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

மேலும் படிக்க: "நம்பர் 1 ப்ரோக்கர் செந்தில் பாலாஜி" அண்ணாமலை கடும் விமர்சனம்

மேலும் படிக்க: திமுக மீது அதிருப்தி? வாய் விட்ட பிடிஆர்.. சுந்தர் சி கடும் தாக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News