Sundar C On DMDK Premalatha: பிரேமலதா அண்ணி திமுக கூட்டணியில் இருந்தாலும் வெளியில் இருந்து அண்ணா திமுகவிற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

Sundar C On DMDK Premalatha: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 5 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள பிரேமலதாவின் பேச்சு ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது இதுகுறித்து மதுரை மத்திய தொகுதீ வேட்பாளர் சுந்தர் சி முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மீது சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டுகள் தான் இருப்பதாக பிரேமலதா மேடையில் கூறியது குறித்து சுந்தர் சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "பிரேமலதா அண்ணி திமுக கூட்டணியில் இருந்தாலும் வெளியில் இருந்து அண்ணா திமுகவிற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கூற வேண்டிய விஷயத்தை அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என நம்புகிறேன்.
முதல்வர் முன்பாகவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை கலாச்சாரம் பெருகி உள்ளது என வெளிப்படையாக கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் தைரியமிக்க வீரப் பெண்மணி பிரேமலதா விஜயகாந்த்” என்று கூறினார். சேலம் மாவட்டத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரேமலதா, "என் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் ஒரே குற்றச்சாட்டு மட்டுமே சொல்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் அவர் மீது செல்ல முடியாது" என்று கூறினார். இதனால், மேடையில் இருந்த ஸ்டாலின், கமல்ஹாசன் அதிர்ச்சி உறைந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து, இதற்கு பிரேமலதாவும் பதிலடி கொடுத்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பும் முக்கிய தொகுதிகளில் ஒன்று மதுரை மத்திய தொகுதி தான். இந்த தொகுதியில் திமுகவின் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி, நாதகவின் அப்துல் ஹக்கிம், தவெக சார்பில் முஸ்தப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் திமுகவின் பழனிவேல் தியாகராஜன், சுந்தர் சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பரப்புரை தொடங்கியதில் இருந்தே ஒருவரைக்கொருவர் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மத்திய தொகுதி என்டிஏ கூட்டணியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி மதுரை தீக்கதிர் திருவள்ளுவர் நகர் தெருவில் உள்ள மக்களிடம் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் சி, ”மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். தினந்தோறும் பல்வேறு மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று திருவள்ளுவர் தெரு பகுதியில் திமுகவை சேர்ந்த 100 நபர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
மதுரை மத்திய தொகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு பாதாள சாக்கடை, குப்பை, தெரு விளக்குகள் எரியாதது பிரதான பிரச்சனையாக உள்ளது. பத்து வருடமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் இந்த தொகுதி பக்கமே வரவில்லை எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினையை கூட தீர்த்து தர வில்லை என மத்திய தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கேள்விகளை கேட்டால் அவர் என்னை வெளியூர் காரர் என விமர்சனம் செய்கிறார். என்னுடைய எதிர் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரே உத்தமப்பாளையக்காரர் அவர் என்னை பார்த்து வெளியூர் காரர் என கூறுகிறார். என்னை சினிமாக்காரன் என்று கூறிக்கொண்டு மற்றொரு சினிமாக்காரனான எனது நண்பர் பிரகாஷ் ராஜை அழைத்து வந்து இங்கு பிரச்சாரம் செய்ய வைக்கிறார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இங்கு பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சினிமாக்காரர் தான் தேவைப்படுகிறார். சொந்தக் கட்சியிலே செல்வாக்கு இல்லாத நபர் பழனிவேல் தியாகராஜன். மதுரை வந்த உதயநிதி மற்ற வேட்பாளர்களுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார். ஆனால் இவருக்கோ பிரச்சாரம் செய்யவில்லை. இதுதான் அந்த கட்சியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிலைமை.
பி டிஆர் பழனிவேல் தியாகராஜனின் இமேஜ் கிழிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. மக்களுக்கு சேவை செய்ய இமேஜ் தேவை இல்லை நல்ல எண்ணம் இருந்தால் போதும்” என்று கூறினார். தொடர்ந்து, மேலும், ராஜராஜ சோழனை விட அதிகமான குடமுழுக்குகளை சேகர்பாபு செய்தார் என பேசிய கமலஹாசன் குறித்து கேட்டதற்கு கையெடுத்து கும்பிட்டு பதில் அளித்த சென்றார் சுந்தர் சி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!