Madurai Latest News Updates: மதுரை மாவட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரச்சார கூட்டம் தொடர்பாக மதுரை மாஸ்தான்பட்டியில் தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மார்ச் 1இல் வரும் பிரதமர்
அதில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. தற்போது மாநாட்டில் மட்டும் பிரதமர் கலந்து கொள்வதாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை முடிந்தால் அதையும் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.
திமுக மீது சாடல்
தொடர்ந்து, "கௌரவ விரிவுரையாளர்களுக்கு நல்லது செய்வோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை. தூய்மை பணியாளர்களை போராட வைத்து அடித்து தெருவில் நிறுத்தி தற்போது சாப்பாடு போடுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களிடம் தற்போது முதலமைச்சர் பேசி எப்படியாவது அடித்து பிடித்து கூட்டணி மந்திரி சபை இல்லாமலே நான் முதலமைச்சராகி உங்களுக்கு நல்லது செய்கிறேன் என சமாளித்து வருகிறார்" என திமுகவை தாக்கி பேசினார்.
'நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம்'
ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, "கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது காரணம், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. எதற்காக டெல்லி சென்று கனிமொழி, ராகுல் காந்தியை பார்க்க வேண்டும். எதற்காக கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதல்வர் பேச வேண்டும். எதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பற்றி பேச வேண்டும். எல்லாம் பார்க்கும்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது தெரிகிறது. நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம் தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை, அவர்கள் மாட்டேன் என சொல்லவும் இல்லை" என்றார்.
தேமுதிகவிடம் பேசவில்லை
தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, "தேமுதிகவிடம் நாங்கள் இதுவரை கூட்டணி பேசவில்லை" என பதிலளித்தார். தொடர்ந்து, சசிகலா புதிய கட்சி தொடங்குவதால் அதிமுக ஓட்டுக்களை பிரிப்பாரா என்ற கேள்விக்கு, "நாங்கள் யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை. ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனும் திமுகவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. பல மாற்றங்கள் வரும்" என்றார்.
ஸ்டாலின் பேச்சு
முன்னதாக, India Today நடத்திய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனும் முழக்கம் தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது" என பேசி உள்ளார். மேலும், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்துவராது என்பது திமுகவிற்கும் தெரியும் என்றும் காங்கிரசுக்கும் தெரியும். ஆட்சியில் பங்கு என்பது கூட்டணியை பிரிக்க இடையில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் சதி" என்றார். இதற்கும் காங்கிரஸ் தரப்பில் சலசலப்பு உண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தவெக கூட்டணி வைக்கிறதா? தனித்து போட்டியிடுகிறதா?.. அருண்ராஜ் பதில்!
மேலும் படிக்க | ஆதவ் முதல் புஸ்ஸி ஆனந்த் வரை! தவெக முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் 10 தொகுதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









