)
2026 Upcoming Tamil Movie Release Updates : புத்தாண்டு பிறக்கும் போது அது புதிய தாெடக்கத்திற்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு புது படங்களின் முக்கிய அப்டேட்களும் இந்த ஆண்டில் வெளியாவது வழக்கமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுப்படங்களின் அப்டேட்கள் ஜனவரி 1ஆம் தேதியான இன்று வெளியாகி வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சம்மருக்கு வெளிவரும் பார்ட் 2 படங்கள்:
2026ஆம் வருடத்தில், சில பார்ட் 2 படங்கள் வெளியாக இருக்கின்றன. அவற்றில் முதலாவதாக மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பார்ப்போம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். குஷ்பு, சினேகா, மீனா உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அடுத்ததாக, சர்தார் 2 படம் வெளியாகிறது. கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இந்த படமும், 2026 சம்மருக்கு வெளியாகிறது.
டிமாண்டி காலணி படத்தின் மூன்றாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புது வருடத்தை ஒட்டி வெளியாகிறது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
வித் லவ்:
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷான் ஜீவிந் நடிக்கும் ‘வித் லவ்’ படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இந்த படம், வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.
ஜமா பட இயக்குநரின் அடுத்த படம்:
2024ல் வெளியான படம், ‘ஜமா’. இந்த படத்தின் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் இன்னொரு படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
After directing and acting in #Jama, #PariElavazhagan is all set to play the lead in his next film!
— Movie Tamil (@_MovieTamil) January 1, 2026
Starring opposite him is #RamyaRanganathan, known for her role in NEEK.
This exciting project is produced by #MillionDollarStudios, marking their 7th film!
More… pic.twitter.com/ISVinGI0Ws
யோகிபாபுவின் 300வது படம்!
நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்திருக்கும் படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. இந்த படத்தை ராஜ் மோகன் எழுதி இயக்குகிறார்.
மகுடம்:
விஷால் இயக்கி வரும் படம், மகுடம். இந்த படத்தை முன்னர் வேறு ஒரு இயக்குநர் இயக்கி வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தை இப்போது விஷால் இயக்கி வருகிறார். இது, விஷால் இயக்கும் முதல் படமாகும். இப்படம், வரும் சம்மருக்கு வெளியாகிறது.
Wishing everyone a Happy New Year !#Magudam #Makutam #DirectorVishal
— Vishal (@VishalKOfficial) January 1, 2026
Summer 2026 Release !!@gvprakash @SuperGoodFilms_ @officialdushara @yoursanjali @dhilipaction @vasukibhaskar pic.twitter.com/dC3tMh8b50
ரேஜ்
ஷான், ஷிர்லே நடித்திருக்கும் ரேஜ் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
New year wishes from Anbu & Regina Madam from the world of #Rage #ரேஜ்
— Quality Pixels (@Quality_Pixels) January 1, 2026
Starring @actorshan_ & @shirleybabithra pic.twitter.com/ObkVQkN54w
ட்ரெயின்:
Team Train wishes everyone a fantastic happy new year!#Traintamilmovie#VijaySethupathi #Mysskin@theVcreations @VijaySethuOffl @shrutihaasan @nasser_kameela @ira_dayanand @itsNarain @preethy_karan @fowziafathima @editorsriwat @saregamasouth pic.twitter.com/wXNNdwiyTl
— Mysskin (@DirectorMysskin) January 1, 2026
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம் ட்ரெயின். ஓராண்டுக்கும் மேலாக உருவாகி வரும் இன்ஹ்ட படம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புது போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.
பிரபாஸ் நடிக்கும் சந்தீப் ரெட்டி வங்கா படமான ‘ஸ்பிரிட்’ முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே போல, செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ