இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 15, 2025, 11:21 AM IST
  • ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார்.
  • இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
  • அடுத்த அத்தியாயத்திற்காக உலகம் காத்திருக்கிறது.
இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2

Celebrating 3 GLORIOUS YEARS of KGF Chapter 2: இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார்.

Add Zee News as a Preferred Source

மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும் காட்சி அமைப்புகள் என- கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன.

சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம், மொழிகளை கடந்து இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, படம் முழுவதிலும் எமோஷன் மற்றும் ஆக்சன் விஸ்வரூபத்துக்கு இடையே ஒரு சமநிலையை படம்பிடித்திருந்தார். கலை இயக்குநர் சிவகுமார் ஜி, கேஜிஎஃப் உலகத்தை தத்ரூபமாக உருவாக்குதில் முக்கிய பங்கு வகித்தார்.

இன்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கேஜிஎஃப் உலகை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், கேஜிஎஃப் சேப்டர் 3- மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. ராக்கி பாயின் வரலாறு தொடர… அடுத்த அத்தியாயத்திற்காக உலகம் காத்திருக்கிறது.

மேலும் படிக்க | சூரியுடன் மோதும் சந்தானம்! ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்!

மேலும் படிக்க | OTT-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படங்கள்.. எந்த தமிழ் படம் முதல் இடத்தில் இருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News