)
National Award Winners: கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பார்க்கிங். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கினார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்தார். ஹரிஷ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை வீட்டில் இருக்கும் ஒருவருக்கும் இடையே காரை பார்க் செய்வது தொடர்பான மோதலே இப்படத்தின் கதை ஆகும். மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த இப்படம் திரையரங்குகளில் மட்டுமல்லாமல், ஓடிடியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய திரைப்பட விருது ஆகும். இந்த சூழலில் 71வது தேசிய சீசனுக்காக வெற்றியாளர்கள் பட்டியல் இன்று (ஆகஸ்ட் 01) டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவித்துள்ளது. இந்த விருது 2023ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது ஆகும். அந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இந்த விருதுகளுக்கு தகுதி பெற்றன.
சிறந்த தமிழ் படம்
இந்த நிலையில் தான் பார்க்கிங் திரைப்படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதை வென்றுள்ளது. பார்க்கிங் திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 4 இந்திய மொழிகள் மற்றும் ஒரு சர்வதேச மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், இப்படத்தில் நடித்திருந்த எம். எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற படங்கள் என்னென்ன?
சிறந்த தெலுங்கு திரைப்படமாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த மலையாள படமாக ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான 'உள்ளொழுக்கம்' திரைப்படமும் சிறந்த இந்தி படமாக KATHAL படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் மற்றும் நடிகை யார்?
சிறந்த நடிக்கருக்கான விருது ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு 12th Fail பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ராணி முகர்ஜி பெறுகிறார். சாட்டர்ஜி vs நார்வே இந்தி படத்தில் நடித்ததற்காக இந்த விருதை ராணி முகர்ஜி வென்றார், மேலும், சிறந்த துணை நடிகைக்கான விருதை உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்ததற்காக ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர்
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிவி பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை இயக்கிய Sudipto sen-க்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ