)
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இதில் “ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.
“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.
சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.
71வது தேசிய விருது பெற்றவர்களின் முழு பட்டியல்:
சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸே (12th ஃபேல்)
சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே)
துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
துணை நடிகை ஊர்வசி (உள்ளொழுக்கு)
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி)
திரைக்கதை ஆசிரியர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)
சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது
தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது
இதேபோல, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ