AA22 X A6 Movie Heroine : தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் அல்லு அர்ஜுன்தான், அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ. இந்த நிலையில், இப்படத்தின் நாயகி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்லீ-அல்லு அர்ஜுன் பட அறிவிப்பு:
தமிழில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், இப்போது இந்திய திரையுலகின் டாப் டைரக்டராக விளங்குபவர், அட்லீ. தமிழில் 4 படங்களை இயக்கிய அட்லீ, அதிலும் 3 படங்களில் விஜய்தான் ஹீரோ. இதற்கு மேல் கோலிவுட்டில் இருந்தால் வேலைக்காவது என்று நினைத்த அவர் பாலிவுட்டிற்கு சென்று ஷாருக்கானை தனது ஜவான் படத்தில் ஹீரோவாக்கினார். அந்த படம் ஹிட்டானது தொடர்ந்து அவர் அடுத்ததாக கைகோர்த்துருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுனும் அட்லியும் இணையும் படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கான பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது.
இவர்தான் நாயகியா?
அல்லு அர்ஜுனை வைத்து, இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க இருப்பது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, சமந்தாதான் இப்படத்தின் நாயகி என கூறப்படுகிறது.
37 வயதான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வாழ்வின் இக்கட்டான சில தருணங்களை சந்தித்தார். உடல்நிலை சரியில்லாத போதும் கூட அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வியால் கொஞ்சம் டல்லாக இருந்த அவர், சில மாதங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்தார். கடைசியாக சிட்டடெல் தொடரில் மட்டும் நடித்திருந்தார். இந்த தொடரும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இப்பொழுது, தயாரிப்பாளராகவும் மாறி இருக்கும் சமந்தா தனது முதல் படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் இவர் திரையுலகுக்குள் கம்- பேக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அதற்காக அட்லீயின் படத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ரசிகர்கள் அவருக்கு பலத்த வரவேற்பு அளித்தனர். அதை பார்த்த இவர், “2 வருஷமா ஹிட் எதுவுமே குடுக்கல..இருந்தாலும் நீங்க குடுக்குற அன்பு ரொம்ப பெருசு..” என்று கூறியிருந்தார்.
சமந்தா-அட்லீ கூட்டணியில் உருவான படங்கள்..
சமந்தா, இயக்குநர் அட்லீக்கு ராசியான நாயகிகளுள் ஒருவர். விஜய்யை வைத்த அவர் இயக்கிய தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களிலுமே சமந்தாதாவுக்கு முக்கிய கதாப்பாத்திரம்தான். இந்த படங்கள் சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதே கூட்டணி தற்போது அட்லீ இயக்கும் படத்தையும் ஹிட் ஆக்குமா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.
இன்னொரு பக்கம், பிரியங்கா சோப்ராவிடமும் நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அட்லீ படத்தில் அல்லு அர்ஜுன் கமிட்.. வாய் பிளக்க வைக்கும் சம்பளம்..எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க | ரெடி ரெடியா! அட்லீ இயக்கும் புதிய படத்தில் இணையும் விஜய் சேதுபதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









