அட்லீ படத்தில் அல்லு அர்ஜுன் கமிட்.. வாய் பிளக்க வைக்கும் சம்பளம்..எவ்வளவு தெரியுமா?

இன்று அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை முன்னிட்டு AA22 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு தற்பது அல்லு அர்ஜுன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2025, 12:32 PM IST
  • பிரம்மாண்டமான பட்ஜெட்டில் AA22xA6.
  • சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது.
  • அல்லு அர்ஜுன்-அட்லீ சம்பள விவரம்.
அட்லீ படத்தில் அல்லு அர்ஜுன் கமிட்.. வாய் பிளக்க வைக்கும் சம்பளம்..எவ்வளவு தெரியுமா?

Atlee Movie With Allu Arjun : தமிழ் திரையுலகில் டாப் இயக்குநராக இருப்பவர், அட்லீ. ஜவான் படம் மூலம் பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்த இவர், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கயுள்ளார். இது தொடர்பான அப்டேட் சற்று முன் வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

அட்லீ இயக்கிய படங்கள்:
தமிழ் திரையுலகில் வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், வெகு விரைவில் டாப் இயக்குநராக மாறியவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். காதல் கதை மூலம் ட்ரையல்ஸ் பார்த்த அட்லீ, அடுத்து வந்ததது கமர்ஷியல் களத்திற்குதான். தமிழில் இயக்கியதே 4 படம்தான். அதிலும் மூன்று படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க அடுத்ததாக ஷாருக்கானிற்கு குறி வைத்தார்.

பாலிவுட்டில் அறிமுகம்:
அட்லீயை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது, ஜவான் திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்திருந்தார். நாயகியாக, நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், அட்லீ அடுத்து ஒரு பெரிய ஹீரோவை வைத்து டோலிவுட்டில் நுழைய உள்ளார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நடிகர்தான் அல்லு அர்ஜுன். 

அல்லு அர்ஜுன்-அட்லீ படம்:
அல்லு அர்ஜுன் (Allu Arjun) படத்தின் கதை குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைப்பெற்று வந்ததாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. அந்தவகையில் தற்போது ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜுனின் 22வது படமும், அட்லீயின் 6வது படமாகும்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் AA22xA6
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கவுள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு வீடியோ இதோ:

வைரலாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ சம்பளம்:
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் 200 கோடி வரை சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள, மேலும் இயக்குனர் அட்லீக்கு 100 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | இன்னும் ரிலீஸே ஆகல..அதுக்குள்ள இவ்ளோ வசூலா? குட் பேட் அக்லி ப்ரீ-புக்கிங் கலக்ஷன்..

மேலும் படிக்க | வடிவேலு ரிஜெக்ட் செய்த படம்! விஜய் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் ஆனது..எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News