விஜய் டிவி மூலம் பிரபலமான நடிகர் ரியோ ராஜ், தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனது பெயரிலிருந்து ராஜ் என்பதை நீக்கியுள்ளது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு விழாவில் இயக்குநர் மிஷ்கின் வழங்கிய அறிவுரையை ஏற்று அவர் இந்த மாற்றத்தை செய்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திங்கட்கிழமையன்று ரியோ ராஜின் அடுத்த படமான 'ராம் இன் லீலா' (Ram in Leela) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் நடிகரின் பெயர் வெறுமனே ரியோ (Rio) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக ரியோ ராஜ் என்று இருக்கும் அவரது பெயரில், 'ராஜ்' என்பது காணாமல் போனது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | சமந்தா–ராஜ் நிடிமொரு வயது வித்தியாசம்! ஆத்தாடி..இவ்வளவா? இது தெரியாம போச்சே..
Rio-Raj ‘s next “ RAM IN LEELA “
After the big success of Aanpaavam Pollathathu rio is back with another fun filled entertainer, looking forward for this. @rio_raj @tridentartsoffl pic.twitter.com/pXqIX5qN4g
— Kolly Censor (@KollyCensor) December 1, 2025
மிஷ்கின் சொன்னது என்ன?
இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ரியோவின் முந்தைய படமான ஆண் பாவம் பொல்லாதது (Aan Paavam Pollathathu) படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் மிஷ்கின், மேடையில் ஒரு ஆலோசனையை வழங்கினார். "எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நீங்கள் உங்கள் பெயரை 'ரியோ ராஜ்' என்பதிலிருந்து 'ரியோ' என்று மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
'ரியோ' என்பது மிகவும் கவர்ச்சியாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது. இனிமேல் உங்களை 'ரியோ' என்றே அழைத்துக்கொள்ளுங்கள்; 'ராஜ்' என்பதை தவிர்த்து விடுங்கள். 'ராஜ்' என்பது 'ரியோ' என்ற பெயருக்கு இருக்கும் தனித்துவத்தை குறைப்பது போல் உள்ளது" என்று மிஷ்கின் கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரை பார்க்கும்போது, ரியோ தனது சீனியர் இயக்குநரின் அறிவுரையை தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.
அடுத்த படம்
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'ராம் இன் லீலா' படத்தில் ரியோவுக்கு ஜோடியாக வர்த்திகா என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். ரியோவின் முந்தைய படமான 'ஆண் பாவம் பொல்லாதது', கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த புதிய படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | சமந்தா - ராஜ் நிடிமோரு: காதல் மலர்ந்த கதை! ஷூட்டிங்கில் ரகசியமாக வளர்ந்த உறவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









