ஆரோமலே படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ

சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ள ஆரோமலே படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 6, 2025, 03:24 PM IST
  • இளைஞர்களுக்காக உருவாகியுள்ள ஆரோமலே.
  • கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடித்துள்ளனர்.
  • சாரங் தியாகு படத்தை இயக்கியுள்ளார்.
ஆரோமலே படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆரோமலே. அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இந்த படத்தை இயக்க கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவும், பிரவீன் ஆண்டனி எடிட்டிங் மற்றும் ஸ்கிரிப்ட் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Add Zee News as a Preferred Source

படத்தின் கதை 

கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ளனர். கிசன் தாஷிற்கு பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த பிறகு அவருக்குள் காதல் மலர்கிறது. அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காதல் செய்கிறார், ஆனால் அது தோல்வியில் முடிவடைகிறது. பிறகு அவரது தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஒரு பிரபல மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு பாஸாக வரும் ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. ஆனால் அவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. இந்த இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா? என்பதே ஆரோமலே படத்தின் கதை. 

நடிகர்கள் நடிப்பு 

படத்தின் நாயகன் ஆன கிஷன் தாஸ் ஒரு நீட்டான பர்பாமன்ஸை கொடுத்துள்ளார். ஒரு பள்ளி மாணவனாகவும், அதே சமயம் ஒரு இளைஞராகவும் அஜித் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல், பேசினால் காதல் என்று ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கும் சில இளைஞர்களின் தோற்றமாக அவரது கதாபாத்திரம் இருந்தது. மறுபுறம் அவரது நண்பராக வரும் ஹர்ஷத் கான் பல இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது ஓன்லைன் பஞ்ச் அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்கள் பெறுகிறது. 

கிஷன் தாசின் அப்பா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இருவரும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளனர். எங்கெல்லாம் படம் தொய்வாய்கிறதோ அங்கெல்லாம் விடிவி கணேஷ் கை கொடுக்கிறார். அவர் தொடர்பாக வரும் சில காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. கதாநாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் ஆரம்பக் காட்சிகளில் சற்று தடுமாறினாலும் போகப்போக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். ஒரு மேட்ரிமோனி நிறுவனத்தின் முக்கிய பதிவில் இருப்பவர் எப்படி இருப்பாரோ அதேபோல சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். 

தொழில்நுட்பக் குழு 

சித்து குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இயக்குனர் சாரங் தியாகு காமெடி மற்றும் காதல் நிறைந்த ஒரு கதையில் ஒரு சின்ன மெசேஜையும் சொல்ல முயற்சி செய்துள்ளார் அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளார் என்று சொல்லலாம். இந்த கதைக்களம் ஒரு புது விதமாக உள்ளதால், படம் பார்க்கும் நமக்கு ஒரு இன்ட்ரஸ்டிங்கை ஏற்படுத்துகிறது. முதல் பாதி வேகமாக சென்றாலும், இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் படம் சற்று மெதுவாக செல்கிறது. சிம்புவின் வாய்ஸ் ஓவர் ஐடியாவும் நன்றாக ஒர்க் ஆகியுள்ளது. நிச்சயம் ஆரோமலே இன்று இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு ருசியான உணவாக அமையும்.

மேலும் படிக்க | 'கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல...' விஜய் பெயரை சொல்லாமல் அஜித் பேச்சு

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் லேட்டஸ்ட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News