)
Aarti Ravi Cryptic Post On Instagram : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர், ரவி மோகன். இவர், தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்து சில மாதங்கள் ஆகின்றது. தற்போது, கெனிஷா என்கிற பெண்ணுடன் இவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ரவி மோகன், கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். இவர்களுக்கு ஆரவ்-அயான் என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தான் உடல் மற்றும் மன ரீதியாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் துன்புருத்தப்பட்டதாக தான் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், கூறியிருந்தார். தன் மனைவியை பிரிந்த புதிதில், அவர் கெனிஷா என்கிற ஒரு பெண்ணுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டது. இது, இவர்களது விவாகரத்து வழக்கில் சில இடையூறுகளை ஏற்படுத்தியது.
இப்போதைக்கு, ரவி மோகனும் ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரவி, எங்கு சென்றாலும் எந்த ஊருக்கு போனாலும் தனது தோழி கெனிஷாவை கூட்டிக்கொண்டு செல்கிறார். இவர்கள் சமீபத்தில் திருப்பதிக்கு ஒன்றாக சென்றிருந்தனர். ரவி மோகன் இப்போது புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதிலும் இருவரும் ஒரே மாதிரி வெள்ளை நிற ஆடை அணிந்து வந்திருந்தனர்.
ரவி மோகனுடனான பிரிவிற்கு பிறகு ஆர்த்தி ரவி, தனது குழந்தைகளுடன் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வது, பிடித்த விஷயங்களை செய்வது என்று நேரத்தை செலவிட்டு வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட பதிவில், ‘இதெல்லாம் வெறும் ஆரம்பம்தான்’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது இன்ஸ்டா ஸ்டோரியில் சில விஷயங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

“உன்னால் கடவுளை ஏமாற்ற முடியாது. உன்னால் பிறரை ஏமாற்ற முடியும், உன்னை கூட ஏமாற்றிக்கொள்ள முடியும். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இன்னொரு ஸ்டோரியையும் வெளியிட்டு இருக்கிறார்.
“எனக்கு கிடைத்த சிறந்த பெற்றோர்களுக்கான அட்வைஸ் என்ன தெரியுமா? உங்கள் குழந்தைகளை எப்போதும் தேர்ந்தெடுங்கள். அந்த ஒன்றுமறியாத ஆன்மாக்களுக்கு உங்கள் நேரமும் அன்பும் தேவைப்படும். குழந்தைகளின் அமைதியை, எப்போதும், எந்த நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று கூறியிருந்தார்.
சூசகமாக சொல்ல வருவது என்ன?
ரவி மோகன் சமீப காலமாக முருகர் கோயில், திருப்பதி கோயில் என்று பல யோயில்களுக்கு தனது தோழி கெனிஷாவுடன் சென்று வருகிறார். ஆர்த்தி, இப்போது ‘கடவுளை ஏமாற்ற முடியாது’ என்று கூறியிருப்பதால், ஒரு வேளை இவரை குறிவைத்துதான் சொல்கிறாராே என்கிற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. அது மட்டுமன்றி, ரவி மோகன் ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெற்றே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதாகவும், இதில் ஆர்த்திக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இனி எந்த அறிவிப்பையும் வெளியிடக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ