சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் மதன் எழுதி இயக்கி உள்ள படம் தான் வித் லவ். டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும், சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். வரும் பிப்ரவரி 6ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது-பட விழாவில் சாய் தன்ஷிகா பேச்சு!
Little moments, big Smiles, and lots of love From the #WithLove Pre-Release Event
Feel the love in theatres from Feb 6th
Starring @Abishanjeevinth & #AnaswaraRajan
A @RSeanRoldan musical
Written & Directed by @madhann_n
Produced by @soundaryaarajni & @mageshraj… pic.twitter.com/AfyfiVD4LZ
— Yuvraaj (@proyuvraaj) February 2, 2026
படத்தின் கதை!
டிசைனர் ஆக இருக்கும் ஹீரோ அபிஷன் ஜீவிந்த் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சராக இருக்கும் ஹீரோயின் அனஸ்வரா ராஜன் ஆகியோர் திருமணத்திற்காக ஒருவரை ஒருவர் முதல் முறையாக காபி ஷாப்பில் பார்க்கின்றனர். அப்போது தான் தெரிகிறது அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளார்கள் என்பது. இருவருக்கும் ஒரு முன்னாள் காதல் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு தங்களது முன்னாள் காதலர்களை இருவரும் சந்திக்க திட்டமிடுகின்றனர். இந்த பயணத்தில் என்ன நடக்கிறது என்பதே வித் லவ் படத்தின் கதை.
நடிகர்கள் நடிப்பு
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலேயே ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அறிமுக நடிகர் என்ற எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பல இடங்களில் அவரது நடிப்பு தான் இந்த படத்தை காப்பாற்றுகிறது என்று சொல்லலாம். மறுபுறம் கதாநாயகி அனஸ்வரா ராஜனுக்கு கதை முழுக்கவே வரும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ளது. அவரும் ஒருபுறம் இந்த படத்தை தாங்கி பிடிக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். இவர்களை தவிர ஃபிளாஷ்பேக்கில் பள்ளி மாணவர்களாக வரும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அனிஷா கதாபாத்திரத்தில் நடித்துள்ள காவ்யா அனில் ரசிக்க வைக்கிறார். மேலும் படத்தில் உள்ள அத்தனை துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
ஷான் ரோல்டன் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் படத்திற்கு பெரிதாக உதவவில்லை என்றாலும், பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, சுரேஷ் குமாரின் எடிட்டிங் பலம் சேர்க்கிறது. யாரிடமும் பேசுவதற்கு தயங்கும் ஹீரோ, மறுபுறம் அனைவரிடமும் தைரியமாக பேசும் ஹீரோயின். இப்படி ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்து அழகான திரைக்கதை மூலம் நல்ல ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மதன். தமிழில் சமீபத்தில் வெளியான காதல் படங்களில் வித் லவ் படம் தனித்து நிற்கிறது.
அதற்கு இந்த படத்தின் கதை கலாம் முக்கிய காரணம். பள்ளியை வைத்து பல்வேறு கதைகள் தமிழில் வந்திருந்தாலும் இந்த படம் தனித்து நிற்கிறது. படம் முழுக்க வரும் காமெடி காட்சிகளும் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது. 96 படம் ஏற்படுத்திய தாக்கத்தை நிச்சயம் வித் லவ் படமும் ஏற்படுத்தும். அந்த அளவிற்கு கதையும் கதைக்களமும் ரசிகர்களை கவர்கிறது. பெரிதாக எந்த ஒரு காட்சியுமே போர் அடிக்காமல் அடுத்தடுத்து சுவாரசியமாக இருக்கிறது. இருப்பினும் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதை யூகிக்கும் விதித்தில் இருப்பது மைனஸ். நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பில் இறங்கியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இந்த படம் ஒரு ஜாக்பாட் என்று சொல்லலாம். நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு இந்த படம் கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் படிக்க | மேக்-அப் இல்லாமல் ருக்மிணி வசந்த்..எப்படியிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









