விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்: செல்வமணி கொடுத்த பதிலடி

நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் Five Star Creations சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது R.K.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2025, 12:34 PM IST
  • அறிக்கை வெளியாகி பரபரப்பு.
  • செல்வமணி சார்பில் அறிக்கை.
விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்: செல்வமணி கொடுத்த பதிலடி

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். நடிகரை தாண்டி இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷ் இயக்கி, நடித்து இருக்கும் இட்லி கடை படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனம் இடையே சில காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. தனுஷ் முன்பணம் பெற்றுக்கொண்டு இன்னும் கால்ஷீட் தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நிலவி வருகிறது. ரெட் கார்டு போடப்பட்டதாகவும் இடையில் தகவல்கள் வந்தது. எனவே அண்மையில் தனுஷுக்கு எதிராக Five Star Creations பங்குதாரர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

Add Zee News as a Preferred Source

இந்நிலையில், தற்போது Five Star Creationsக்கு R.K.செல்வமணி பதிலடி கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அதில்,

நீங்கள் எனக்கு 31.3.2025 அன்று எழுதிய கடிதம், இன்றைய தினம் சமூக வலைத்தளங்களிலிருந்து, என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பெற்றுக் கொண்டேன்.எனக்கு எழுதப்பட்ட கடிதம் என்றால் என் விலாசத்திற்கு, நீங்கள் எனக்கு அனுப்பி இருக்கலாம் அல்லது என் விலாசம் தங்களுக்கு தெரியாது என்றால், தங்கள் Five star நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரும், தங்களின் வாழ்க்கை துணைவரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நெடுநாள் நிர்வாகியுமான தங்கள் கணவர் Five star திரு.கதிரேசன் அவர்களுக்கு நன்கு தெரியும். சில முறை என் வீட்டிற்கு கூட வந்துள்ளார். அவரை கேட்டு எனக்கு அனுப்பி இருக்கலாம். 

ஆயினும் தங்கள் நோக்கம், "இந்த கடிதம்" எனக்கு அனுப்பப்பட்டதல்ல, என் பெயர் தாங்கி, யாருக்கு நீங்கள் அனுப்ப விரும்பினீர்களோ, அவர்களுக்கே அனுப்பி உள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். எனவே அதுபோலவே இந்த கடிதத்தையும் நான் அனுப்புகிறேன். 

30.9.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில, தாங்கள் திரு.தனுஷ் அவர்களிடம் Call sheet கேட்டு நீங்கள் புகார் அளிக்கவில்லை. 

தாங்கள் சில வருடங்களுக்கு முன்னால் திரு.தனுஷ் அவர்களுக்கு 3 3கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16கோடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் தாங்களும், தங்கள் கணவரும் அளித்த புகார். 

3கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, 16கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே திரு.தனுஷ் அவரிடம் 16கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கணவர் திரு.கதிரேசன் நிலையை சம்மேளனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொகையை பெற்று தருமாறு வேண்டுகோள் விடுத்தோம். 

நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிக பட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர். அதை Five Star நிறுவனத்தின் பங்குதார்களின் ஒருவராகிய திரு.கதிரேசன் அவர்கள் என்னுடைய நெடுநாள் நண்பர் என்பதாலும், திரு.தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்ற முறையிலும், எனக்கும் நன்கு நட்புள்ளது என்பதின் அடிப்படையிலும், தனிப்பட்ட முறையில் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என முயற்சிக்கிறேன் என தெரிவித்தேன்.

மேலும் படப்பிடிப்பு குழுவினர் இரண்டு நாட்களுக்கு மேலாக தேனியில் காத்திருக்கின்றனர். படப்பிப்பு நடத்தாமல், சம்மேளன தொழிலாளர்கள் காத்திருப்பதாலும், தயாரிப்பாளருக்கும் நஷ்டம், எங்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதை சம்மேளன தலைவராக நான் தெரிவித்தேன். 

பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்கக்கூடாது என உங்கள் கணவர் தெரிவித்தார். இனிமேல் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளரான உங்கள் உறுப்பினரை அழைத்து பேசி படப்பிடிப்பை நிறுத்திக் கொள்ளுங்கள். சம்மேளனம் ஆகிய நாங்கள் இனியும் படப்பிடிப்பை நிறுத்த இயலாது என்று தெரிவித்தேன். 

நடிகர் சங்கத்தின் சார்பில் வந்திருந்த திரு.நாசர் மற்றும் திரு.பூச்சி முருகன் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள், இரண்டு மடங்குக்கு மேல் கேட்பது நியாயம் இல்லை என்றாலும், சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி இதற்கு மேல் ஏதாவது அதிக தொகை பெற்று தர முடியுமா என பேசி பார்க்கிறோம் என்று சொல்லி சென்றார்கள். பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும் என்பதால் அக்டோபர் 30க்குள் இந்த பிரச்சனையை நியாயமாக முடித்து தர சம்மேளனம் முயற்சி செய்யும். சம்மேளனத்துக்கும் பல்வேறு அழுத்தங்கள் உள்ளன. எனவே உடனே படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் நாங்கள் தெரிவித்தோம்.இனியும் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்தி வைக்க இயலாது. படப்பிடிப்பை உடனே தொடங்க வேண்டும் என நடிகர் சங்கமும், சம்மேளனமும் அளித்த வேண்டுகோளையும், உறுதியையும் ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பை நடத்த அனுமதித்தனர். 

படப்பிடிப்பை நிறுத்தியது தயாரிப்பாளர்கள் சங்கம். நிறுத்தப்பட்ட படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிட விரும்புகின்ற மேலிடம் முடிவெடுத்தால், நிறுத்த உத்தரவிட்டுள்ள "தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கோ" அல்லது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ள "உங்கள் கணவர் திரு.கதிரேசன்" அவர்களுக்குதானே உத்தரவிட்டிருக்க வேண்டும்? ஏற்கனவே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்ற எங்களுக்கு ஏன் உத்தரவு இட போகிறார்கள். 

புதிய பிரச்சனையை உருவாக்க திரு.மோடி முதல் திரு.டிரம்ப் வரை மேலிடத்து உத்தரவு என நீங்கள் யாரையாவது கொண்டுவர முயற்சிக்கலாம். நடந்தது இவ்வாறு இருக்க ஏதோ மேலிடத்து உத்தரவு என்ற புதிய அரசியலை புகுத்த முயற்சித்துள்ளீர்கள். திரைப்பட சங்கங்களில் ஏற்கனவே பல்வேறு அரசியல் நடக்கின்றது. நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள். 

நடிகர் சங்க நிர்வாகிகள் அளித்த உறுதி படி நடிகர் சங்கம் சார்பில் திரு.நாசர், திரு.பூச்சி முருகன் மற்றும் திரு.கருணாஸ் போன்ற நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் திரு.தனுஷ் அவர்களிடம் பேசி "7கோடி வரை பெற்று தரலாம் சம்மதமா?" என கேட்டார்கள். ஆனால் அதற்கும் உங்கள் கணவர் திரு.கதிரேசன் அவர்கள் சம்மதிக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு.முரளி ராமசாமி அவர்களும், இன்னொரு செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் என்னிடம், "நீங்கள் தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி அதிக பட்சம் என்ன பெற்று தர முடியுமோ, அதற்கான முயற்சியை செய்யுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே நாங்கள் அக்டோபர் 30க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று என உறுதி அளித்தாலும், திரு.முரளி மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம். அதன் 8கோடி வரை பெற இயலும் என்ற நிலையை எய்தினோம். இறுதியாக திரு.தனுஷ் அவர்கள் "அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை என்றாலும் உங்களுக்காகவும், தயாரிப்பாளர்கள் சங்க வேண்டுகோளுக்காகவும் மட்டுமே நான் இதற்கு சம்மதிக்கிறேன். இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட வழங்க நான் தயாராக இல்லை வேண்டுமானால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.

இதை நான் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும் போது நாங்கள் தெரிவித்தோம். 

ஆனால் அப்போது தங்கள் கணவர் திரு.கதிரேசன் அவர்கள் இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக 15கோடி தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன் என்று கூறிவிட்டார். 

இதில் நியாயம் இல்லை என்று நாங்களும், நடிகர் சங்கமும் நினைத்ததால் இனி இந்த பிரச்சனையில் தலையிட இயலாது என்று வேதனைக்கு சாட்சி கூற நீங்கள் வந்ததை போல நீங்கள் படும் மன தங்கள் கணவரிடமும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்துவிட்டோம். தங்களை போல தங்கள் கணவரின் DHINA உளைச்சலுக்கு சாட்சியம் சொல்ல உங்கள் பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து வந்ததை போல, மேற்கண்ட கடிதத்திற்குபுதிதாக சாட்சியம் சொல்ல நான் யாரையும் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. 

ஏனெனில் நான் மேலே கூறிய அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்க சம்மேளன நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருக்கும் போது நடந்த உண்மை ஆகும். எனவே நடந்த அனைத்திற்கும் அவர்களே சாட்சியம். 

அன்புள்ள சாகோதரியே நடந்ததில் சிறு பகுதியை மட்டுமே தங்களுக்கு, கடிதமாக எழுதி உள்ளேன். நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என்றும் எப்பொதும் நட்புடனே இருக்க விரும்புகிறேன் எங்களை துண்டாதீர்கள். நன்றி என செல்வமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: ராம் கோபால் வர்மாவின் சாரி.. பிரம்மாண்டமாக நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

மேலும் படிங்க: என்னை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.. விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த குஷ்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News