)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் வென்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அவரது செயலை பாராட்டும் வகையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை நாட்டின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அந்த வகையில் அஜித் குமாரும் அந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கையால் பெற்றார். இந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது பார்க்கப்படுகிறது. அப்படியான விருதை பெற்றதற்கு அஜித் குமாருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நேற்று (ஏப்ரல் 29) டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பினார். இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்ரல் 29) விமான நிலையத்தில் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கான பிசியோ சிகிச்சையை அவர் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், நடிகர் அஜித் குமார் தனது 54வது பிறந்தநாளை கொண்டாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ