Actor Ajith kumar pays tribute to F1 legend ayrton senna: கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித்குமார், தற்போது மறைந்த கார் ரேஸ் வீரரான அயர்டன் சென்னாவிற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் வென்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அவரது செயலை பாராட்டும் வகையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை நாட்டின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அந்த வகையில் அஜித் குமாரும் அந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கையால் பெற்றார். கலைத்துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாக இந்த விருது நடிகர் அஜித் குமாருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் அஜித், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து துணை ஹீரோவாக மாறி பின்னர் ஹீரோவாக ஆன அஜித், எந்த விதமான சினிமா பின்புலமும் இன்றி திரையுலகிற்கு வந்தவர். இதனாலேயே இவருக்கு அதிகளவில் ரசிகர் கூட்டம் இருந்தது.
அஜித்திற்கு சினிமாவை தாண்டி பிடித்த ஒரு விஷயம், கார் மற்றும் பைக்குகள். முன்னர் அதிகமாக பைக் ஓட்டி வந்த இவர், சில அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு அதனை நிறுத்திக்கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பைக்கில் இந்தியா டூர் சென்றார். துபாயில் நடந்த கார் ரேசில் இவர் தலைமையிலான அணி பங்கேற்று மூன்றாம் இடத்தை பெற்றது, அதன் பிறகான இன்னொரு ரேசில் இவரது அணி வெற்றி வாகை சூடியது. துபாய் கார் ரேசில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித், இப்போது உலக செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். எனவே 54 வயதான அஜித்குமார் இப்போதும் கார் ரேஸில் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடிகர் அஜித் குமார் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தால் அதில் அவர், "இமாலோ சர்க்யூட்டில் டம்பெரெல்லௌ கார்னரில் மே ஒன்று அன்று நடைபெற்ற கார் பந்தய போட்டியில் உயிரிழந்த கார் ரேஸ் வீரரும் மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் வென்ற பிரேசில் நாட்டு வீரருமான அயர்டன் சென்னாவிற்கு அஜித் குமார் அஞ்சலி செலுத்தினார்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் படிக்க | அஜித் மட்டுமல்ல..தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெறும் 13 பேர்!! முழு லிஸ்ட்..
மேலும் படிக்க | ச்சீ..அஜித் இப்படிப்பட்ட ஆளா? ஹீரா சொன்ன அதிர்ச்சிகர விஷயங்கள்..உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ