Ajith Kumar Is Saying Vijay Dialogue In Good Bad Ugly : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித் விஜய்யின் ஒரு டைலாக்கை பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

Ajith Kumar Is Saying Vijay Dialogue In Good Bad Ugly : விடாமுயற்சி படத்திற்கு பிறகு வெளியாகும் அஜித்தின் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித், AK எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இதில் அஜித் பேசியிருக்கும் ஒரு டயலாக் குறித்து தற்போது இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
குட் பேட் அக்லி:
இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது குட் பேட் அக்லி. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த விடாமுயற்சி படம் அவரை கைவிட்டு நிலவில் இந்த படமாவது சரிந்து கிடக்கும் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. படத்தின் டிரைலர் சமயத்தில் வெளியானது.
இதை வைத்து பார்க்கும்போது ஹீரோ அஜித்குமார், இதில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல தெரிகிறது. சிறுவயதில் பார்த்து வளர்ந்த விண்டேஷ் அஜித்தை, இந்த படத்தில் ரீ-கிரியேட் செய்திருக்கின்றனர்.
அஜித் பேசிய விஜயின் டயலாக்:
தமிழ் திரையுலகைப் பொருத்தவரை, வழக்கமாக அஜித்-விஜய் ரசிகர்கள் அடித்துக் கொள்வது உண்டு. அதிலும், இரு நடிகர்களின் படமும் ஒன்றாக ஒரே நாளில் வெளியாகிறது என்றால் அது குறித்து கேட்கவே வேண்டாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பு ரசிகர்களும் கொஞ்சம் முதிர்ச்சி பெற்ற மனநிலையில் இருக்கின்றனர். பழைய மாதிரி அடித்துக் கொள்வதில்லை. இவர்களுக்கிடையே நட்புறவை இருக்கிறது இல்லையோ, அஜித்தும் விஜயும் நல்ல நண்பர்கள் என்பது பெரிதும் வெளியில் தெரியாத உண்மை.
முன்னர், அஜித்தின் பிரபலமான டயலாக்கை விஜய் அவர் படத்தில் கலாய்ப்பதும், விஜயின் டயலாக்கை அஜித் அவர் படத்தில் கலாய்ப்பதும் வழக்கமாக இருந்தது. இப்போது குட் குட் பேட் அக்லி படத்திலும் அப்படி ஒரு விஜயின் டயலாக்கை அஜித் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன வசனம்?
சினிமாவில் ஆக்டிவாக இருந்த விஜய் இப்போது அரசியலில் படு ஆக்டிவாக இருக்கிறார். அவர் சமீபத்தில் நடந்த தனது அரசியல் தவெக கட்சி கூட்டத்தில், “What bro, it's very wrong bro” என்று சில அரசியல் கட்சிகளை கலாய்த்திருப்பார். தற்போது இந்த டயலாக்கை அஜித், குட் பேட் அக்லி படத்தில் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது அஜித்குமாரின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியமா? அஜித், கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனத்திலும் வசூலிலும் ஹிட் கொடுக்கும் படத்தை கொடுக்கவில்லை. அவரது கெரியரிலேயே இரண்டிலும் வெற்றி பெற்ற படங்கள் பில்லா மற்றும் மங்காத்தா ஆகியவை மட்டும்தான். ஒவ்வொரு படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை வைத்து ஏமாந்து போகும் இவர்கள், குட் பேட் அக்லி மீதும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். காரணம், இது அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என்பதால்தான். அதே போல, இந்த படத்திற்காக அஜித் உடல் எடை குறைந்திருக்கிறார், மெனக்கெட்டு சில விஷயங்களையும் செய்திருக்கிறார். இதனால், இதன் அவுட் புட் நன்றாக வந்திருக்கலாம் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ