பார்ப்பதற்கு அஜித் போலவே இருக்கும் சீரியல் நடிகர்! வைரலாகும் போட்டோ..

Ajith Kumar Lookalike Tejas Gowda Photos : பார்ப்பதற்கு ஒரு சீரியல் நடிகர் அஜித் போலவே இருக்கிறார். அவரது புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Last Updated : Oct 11, 2025, 11:06 AM IST
  • அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் நடிகர்!
  • சீரியலில் நடித்துள்ளார்..
  • யார் தெரியுமா?
பார்ப்பதற்கு அஜித் போலவே இருக்கும் சீரியல் நடிகர்! வைரலாகும் போட்டோ..

Ajith Kumar Lookalike Tejas Gowda Photos : உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி பிறந்திருப்பதாக சிலர் நம்புவர். நம்மை பார்க்கும் சிலரே கூட, “எனக்கு தெரிந்தவர் பாேல இருக்கிறாய்” என்று கூறுவர். அப்படி இருக்கையில், நடிகர்களின் முகம் கொண்ட பிற மக்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர். தற்போது, அப்படிப்பட்ட ஒருவரின் முகம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

பார்ப்பதற்கு அஜித் போலவே..

தமிழ் திரையுலகில், டாப் நட்சத்திரங்களுள் ஒருவராக இருக்கிறார், அஜித்குமார். ஒரு புரம் சினிமாவில் பிசியாக இருந்தாலும், இன்னொரு புரம், தனக்கு பிடித்த ரேசிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சமயத்தில்தான், ஒரு சீரியல் நடிகர் பார்ப்பதற்கு அவர் போலவே இருப்பதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரும் சீரியல் நடிகர்தான். அஜித்தையும் இவரையும் அருகருகில் நிற்க வைத்து பார்த்தால், அப்படியே அண்ணன் - தம்பி போலவே இருப்பார்கள்.  

யார் அவர்?

அந்த நடிகரின் பெயர், தேஜஸ் கௌடா. இவர் பார்ப்பதற்கு முக ஜாடையில் அப்படியே அஜித் போலவே இருப்பதாக ரசிகர்கள் நினைப்பதுண்டு. எங்காவது அஜித்திற்கு டூப் போட வைக்க வேண்டும் என்றால் கூட, இவரை அழைத்து சென்றுவிடலாம் என்று சிலர் ஜோக் போடுவார்கள். அந்த அளவிற்கு முக பொருத்தங்கள் பக்காவாக இருக்குமாம்.

இந்த நடிகர், கன்னட திரையுலகை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த சீரியல், 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில் இவருக்கு ஜோடியாக, ஸ்ரீதூ கிரிஷ்ணன் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கு பிறகு தேஜஸ், பெரிதாக எந்த தமிழ் சிரியலிலும் தலைக்காட்டவில்லை. இப்போது அவர் பிற ப்ராஜெக்ட்களில் பிசியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

AK

என்ன செய்கிறார் அஜித்?

நடிகர் அஜித், தற்போது வெளிநாட்டில் தனது ரேசிங் டீமுடன் போட்டிகளில் கலந்து கொண்டு பிசியாக இருக்கிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதில், குட் பேட் அக்லி திரைப்படம் மட்டும் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

அஜித், அடுத்ததாக தனது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காக தன்னை அஜித் தயார் செய்து வருகிறார். இந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்குகிறார்.

அஜித், தனது அடுத்த படத்திற்கு சுமார் ரூ.150-180 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதற்கு சில தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்பு கொள்ளாததால், அவரது 64வது படத்தை தொடங்கும் பணிகள் இழுபறியில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 2வது மனைவியாக மாறிய 7 டாப் நடிகைகள்! லிஸ்டில் யாரெல்லாம் பாருங்க..

மேலும் படிக்க | அச்சு அசல் அஜித்தின் ஜெராக்ஸாக இருக்கும் அவரது தம்பி! வைரல் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News