நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், மக்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இச்சூழலில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்ப்டம் வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துடன் எஸ். ஜே. சூர்யா, த்ரிஷா, சுனில், பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விடாமுயற்சி திரைப்படம் சரியாக போகததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
மேலும் படிங்க: இயக்குநர் பாலா இப்படிபட்டவரா? உண்மையை உடைத்த பிரபலம்
தனுஷுடன் அடுத்த படம்
இந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அஜித் குமார், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக இருப்பதாகவும்., இப்படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரணும் தெரிவித்திருந்தார்.
அதேபோல் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், கார் ரேஸில் தீவிரமாக இருக்கும் அஜித் அதை முடித்துவிட்டு சென்னை வந்தவுடன் இப்படம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் அவ்வபோது படங்களையும் இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் முதலில் வெளியான படம் பவர் பாண்டி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவதாக ராயன் படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வசூலை ஈட்டியது. இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பாடம் வெளியானது. ஆனால் இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: புற்றுநோயால் பாதிப்பு! நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ