)
Ajith Kumar Padma Bhushan Award 2025 First Photo: இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது, நடிகர் அஜித் குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விருது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வெளியான போட்டோ!
அஜித் குமார், இன்று பத்ம பூஷன் விருதினை வாங்குவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்தார். மாலை 4 மணிக்கு மேல் தொடங்கிய விழாவில் தனது மனைவி ஷாலினி, குழந்தைகள் அனௌஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு, இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கையால் அவருக்கு விருது வழங்கப்பட்டது.
Congratulations #PadmaBhushan #AjithKumar
— Centrism | மய்யம் (@CentristPulse) April 28, 2025
Hope, you make India proud in the coming years pic.twitter.com/MBkahi54bt
கலைத்துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான விருதை நடிகர் அஜித் குமார் பெற்றுக்கொண்டார். அவர் விருது வாங்கிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அஜித்திற்காக அவரது குடும்பத்தினர் எழுந்து நின்று கைத்தட்டும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஷாலினி, அஜித்தின் சகோதரர், மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக், மைத்துனன் ரிச்சர்ட் ரிஷி, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோர் இந்த புகைப்படத்தில் இருக்கின்றனர்.
கார் ரேசிலும் கலக்கும் அஜித்!
நடிகர் அஜித், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து துணை ஹீரோவாக மாறி பின்னர் ஹீரோவாக ஆன அஜித், எந்த விதமான சினிமா பின்புலமும் இன்றி திரையுலகிற்கு வந்தவர். இதனாலேயே இவருக்கு அதிகளவில் ரசிகர் கூட்டம் இருந்தது. அஜித்திற்கு, அவர் நடிக்கும் திரைப்படத்தை விட வேறு எந்த நேரத்திலும் கேமரா முன்னிலையில் இருக்க பிடிக்காது. பிரைவசியை விரும்பும் இவர், தனது குடும்பத்தினரையும் கேமராவின் கண்களில் இருந்து பாதுகாப்பார். அது மட்டுமல்ல, இவர் வேறு எந்த சமூக வலைதளத்திலும் கூட இல்லை.
அஜித்திற்கு சினிமாவை தாண்டி பிடித்த ஒரு விஷயம், கார் மற்றும் பைக்குகள். முன்னர் அதிகமாக பைக் ஓட்டி வந்த இவர், சில அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு அதனை நிறுத்திக்கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பைக்கில் இந்தியா டூர் சென்றார். துபாயில் நடந்த கார் ரேசில் இவர் தலைமையிலான அணி பங்கேற்று மூன்றாம் இடத்தை பெற்றது, அதன் பிறகான இன்னொரு ரேசில் இவரது அணி வெற்றி வாகை சூடியது. துபாய் கார் ரேசில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித், இப்போது உலக செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்.
அஜித்திற்கு, இந்த பத்மபூஷன் விருது கிடைத்ததை தொடர்ந்து, பலரும் இவர் குறித்து பெருமைக்குரிய போஸ்ட்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ