)
Akshay Kumar Daughter Asked To Send Nudes : தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர், அக்ஷய் குமார். இவர், தமிழில் வெளியாகும் பல படங்களின் இந்தி ரீ-மேக்கில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சில வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் பெயர் போனவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
மகளிடம் நிர்வாண புகைப்படம் கேட்டனர்!
சமீபத்தில் சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மும்பை தலைமை காவல் நிலையத்தில் நடந்தது. அதில், அக்ஷய் குமார் தன் வாழ்வில் நடந்த சில தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். தனது 13 வயது மகள், ஒரு நாள் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது, அவரிடம் யாரென்றே தெரியாத நபர் ஒருவர் வந்து நிர்வாண புகைப்படத்தை கேட்டதாக தெரிவித்திருக்கிறார்.
“இந்த சம்பவம் எனது வீட்டில்தான் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. எனது மகள் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தார். இது போன்ற ஆன்லைன் வீடியோ கேமை யாரென்றே தெரியாதவருடன் நாம் விளையாடலாம். அப்படி விளையாடும் போது அவ்வப்போது சிலரிடம் இருந்து மெசஜ்கள் வரலாம். அப்போது அவளுக்கு ‘நீ ஆணா பெண்ணா?’ என்று கேட்டு ஒரு மெசஜ் வந்தது. அதற்கு அவள், ‘பெண்’ என்று ரிப்ளை செய்தாள். உடனே, ‘உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்புவாயா?’ என்று குறுஞ்செய்தி வந்தது. உடனே என் மகள் கேமை ஆஃப் செய்து விட்டு, அனைத்தையும் எனது மனைவியிடம் கூறினாள். இப்படித்தான் அனைத்தும் ஆரம்பிக்கும், இதுவும் சைபர் குற்றம்தான்” என்று தெரிவித்தார்.
கோரிக்கை:
சைபர் குற்றம் குறித்து தொடர்ந்து பேசிய அக்ஷய் குமார், இது தெருவில் நடக்கும் குற்றத்தை விட மிகவும் கொடுமையானது என்றும், மகாராஷ்டிராவின் முதலமைச்சரிடம் ஒரே ஒரு கோரிக்கை வைப்பதாகவும் கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கை என்னவென்றால், 7 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ‘சைபர் பீரியட்’ எனும் ஒரு பீரியடை ஒதுக்கி, அவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இப்போதைய காலக்கட்டத்தில், வயது வந்தோருக்கு இணையாக குழந்தைகளும் செல்போன்கள் மற்றும் பிற சாதனங்களை உபயோகித்து டிஜிட்டல் உலகில் தலையெடுக்க ஆரம்பித்து விட்டதால் அவர் இது போன்ற கோரிக்கையை வைத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ