Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், .M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள் என்று டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.

Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள் என்று பின்வரும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இத்தகைய காலகட்டத்தில், சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கனவே 18 சதவீதம் ஜிஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், Local Authorities Entertainment Tax (LBET) என்று 8 சதவீத வரி, 2017 முதல், கடந்த 8 வருடங்களாக தமிழ் நாட்டில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களின் கோரிக்கையை மனதில் கொண்டு, இன்று இந்த Local Authorities Entertainment Tax-ஐ தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.P. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ் சினிமா சார்பிலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“எட்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக கேளிக்கை வரி பாதியாக குறைப்பு. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு. தமிழக அரசு கேளிக்கை வரியை குறைத்திருக்கிறது, தமிழ் திரைப்பட உலகின் வலியை குறைத்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ