நடிகர் விஜய் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவிட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்து வரும் விஜய், இப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பிரபல நடிகை பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி உ:ள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்பாக இப்படத்தை இறக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுதான் தேதியை அறிவித்திருந்தனர். அதேசமயம் இப்படம் அரசியல் ரீதியான ஒரு கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை இரண்டு மாநாடுகளை நடத்திய நிலையில், கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் மையமாக பார்க்கப்படும் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரியலூர், நாமக்கல் போன்ற டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.
இந்த சூழலில் தான், கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்ப்வம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தான் அக்டோபர் 5ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக தற்போது ஜனநாயகன் படத்தின் ப்ரோமோசன் வேலைகள் முடங்கி உள்ளன.
கரூர் சம்பவம் அரங்கேறி 10 நாட்களே ஆகி உள்ளதால், இந்த சமயத்தில், படம் தொடர்பான அறிவிப்பு சரியாக இருக்காது என படக்குழு யோசித்திருப்பதாக தெரிகிறது. இந்த பிரச்சனை ஓரளவு சரியான பின்பே ஜனநாயகன் படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால், தற்போது ஜனநாயகன் படம், திட்டமிட்டபடி சரியாக ஜனவரி 09ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது தள்ளிபோகுமா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழும்பி உள்ளது.
மேலும் படிக்க: மிராய் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி! வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும் படிக்க: துருவ் விக்ரம் பற்றிய கேள்வி..வெட்கப்பட்டு பதிலளித்த அனுபமா! அப்போ காதல் கன்ஃபார்ம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









