நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் படம் ராம்போ.. OTTயில் வெளியீடு

குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து தயாராகியுள்ள ராம்போ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக போவதாக கூறப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2025, 04:41 PM IST
  • படத்தில் புதிய முகமாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகியுள்ளார்.
  • தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
  • ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் படம் ராம்போ.. OTTயில் வெளியீடு

தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ” படத்தை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும்.

Add Zee News as a Preferred Source

ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம்.

அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இந்த படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…,

முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்த முறை அவர் நகர வாழ்க்கை பின்னணியில் ஒரு கதை சொல்ல நினைத்தபோது, அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. சன் டிவி நெட்வொர்க் தயாரிப்பில் இப்படம் உருவானது எனக்கே பெரும் உற்சாகம் அளித்தது,” என்றார்.

படத்தில் புதிய முகமாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகியுள்ளார். மேலும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரஞ்சித் சஜீவ் வில்லனாக நடித்துள்ளார். R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதிரடி காட்சியமைப்புகள், எமோஷன், இசை, ஆக்சன், எனராம்போரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சன் நெக்ஸ்ட் தளத்தில் தற்போது “ராம்போ” உட்பட பல புதிய தமிழ் படங்கள் 3 மாத சந்தாவாக வெறும் ரூ.299-க்கு கிடைக்கின்றன!

சன் நெக்ஸ்ட் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய படங்கள்:

இந்திரா வசந்த் ரவி, மெஹ்ரீன் கௌர் பீர்ஸிதா நடிப்பில், சபரிஷ் நந்தா இயக்கியுள்ள புதிய படம். இந்த க்ரைம் திரில்லர் திரைப்படம், ஒரு தொடர் கொலை வழக்கின் பின்னணியில், அழுத்தமான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

சரண்டர் தர்ஷன் தியாகராஜா, லால் நடிப்பில், கவுதமன் கணபதி இயக்கத்தில் உருவான மனித உணர்ச்சிகளும், தியாகமும் கலந்த அதிரடி ஆக்சன் படம்.

மெட்ராஸ் மேட்னி காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் ஒரு அழகான டிராமா திரைப்படம்.

சன் நெக்ஸ்ட் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 4000+ திரைப்படங்கள், 44+ நேரலை சேனல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | பிரியங்கா மோகனின் AI கவர்ச்சி புகைப்படங்கள்! இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு..

மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : போட்டியில் இருந்து விலகிய நந்தினி! காரணம் என்ன? அவரே சொன்னது-வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News