யூடியூப்பில் சினிமாத்துறையினர் மீது அவதூறாக பேசுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து பயில்வான் அருவருக்கத் தக்கவகையில் பேசுவதாக குற்றம்ச்சாட்டினார். எந்தவித ஆதாரமும் இல்லாமல், பொய் புரட்டு செய்திகளை பரப்பிக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக சாடினார்.
அவருடைய பேட்டிகள் மஞ்சள் பத்திரிக்கைகளைப்போல் இருப்பதாகவும் ராஜன் விளாசினார். மேலும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருப்பதாகவும் ராஜன் தெரிவித்தார். இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க | எஸ்.ஜே.சூர்யாவுக்கு லேட்டஸ்டாக கிடைத்த கியூட் தங்கை
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரிக்கை துறையில் தனக்கு 45 ஆண்டுகாலம் அனுபவம் இருப்பதாக கூறினார். தன்னைப் பற்றி கே.ராஜன் கூறுவது முற்றிலும் பொய் என்றும் தெரிவித்தார்." பத்திரிகை துறையில் 45 ஆண்டு காலம் அனுபவம் உள்ளவன். என்னைப் பற்றி முற்றிலும் தவறாகும் பொய்யாகவும் சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் பேசி வருகிறார். ராதிகா என்னை திருவான்மியூரில் அடித்தார். ஆனால் கே.ராஜன் பெசன்ட் நகர் என்று சொல்லியது தவறு. எனக்கு செய்தி எழுத கற்று கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார். என்னை யூ டியூப் சேனல்கள் மட்டுமே வாழ வைக்கின்றன. ராஜன் கூறுவது முற்றிலும் பொய்.
நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடம் பணம் வசூலித்தலில்லை. மேலும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தகவல்களையும், செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறேன். எனக்கு யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். யூடியூப் சேனலில் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன். தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது அருண் விஜய் - சிவகார்த்திகேயன் சண்டை!
என் மீது புகார் கொடுத்துள்ள ராஜன் எதற்காக குடும்பத்தை விட்டுவிட்டு தனியார் ஓட்டலில் தங்கி இருக்கிறார்?. அவர் பல விழாக்களிலும், சேனல்களிலும் தொடர்ந்து அருவருப்பாகவும், தரக்குறைவாகவும் பேசியும் என்னை மிரட்டியும் வருகிறார். நான் யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பேசி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசிகிறேன்.
மக்கள் அதற்கு பெருமளவு ஆதரவு அளிக்கின்றனர். முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் யூடியூப் சேனலிலும் நான் தொடர்ந்து பேசுகிறேன். அதில் நான் தவறாக பேசியிருந்தால் அவர் என்னை தொடர்ந்து பேச அனுமதிப்பாரா?" என வினவினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR