2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக பரத்தின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Kaalidas2 gearing up for a Worldwide Theatrical Release on April 3
A @bharathhere & @ajaykarthi11 Film pic.twitter.com/nPH7lpLbja
— ஆந்தைகண்ணன் (@cinemascopetaml) March 8, 2026
இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார்
முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். 'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
#Kaalidas2 - @bharathhere | @ajaykarthi11 | @5starsenthilk |@srisenthil | @SamCSmusic | @BhavaniSre |#CineTimee | pic.twitter.com/NSc1WyUC8c
— Cine Time (@CineTimee) March 8, 2026
புலனாய்வு திரில்லர்
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதே சமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, புரொடக்ஷன் டிசைனை G.துரைராஜ் கவனிக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
காளிதாஸ் 2
இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் (SKY PICTURES) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் (FIVE STAR) K. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கோடை விடுமுறை ஆரம்பத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படம், திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காளிதாஸ் 2 திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஸ்ரீ செந்தில், "இது முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இருக்காது. மாறாக, முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்களை வைத்து வேறு ஒரு புதிய கதையைக் களமிறக்குகிறோம். இதனை ஒரு 'காளிதாஸ் யூனிவர்ஸ்' என்று நீங்கள் சொல்லலாம்" என தெரிவித்துள்ளார் . மேலும், நடிகர் பரத்துடன் இணைந்து மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Kaalidas2, an intense emotional thriller, is gearing up for a Worldwide Theatrical Release on April 3@bharathhere @ajaykarthi11 @5starsenthilk @srisenthil @SamCSmusic @BhavaniSre @abarnathi21 @palanicinema @Sureshbaladop @theedittable @AnanthNag24 #Durairaj @dorothy_jai… pic.twitter.com/5GNHOR59H4
— Balaji (@RDBalaji) March 8, 2026
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









