மாதம்பட்டி ரங்கராஜ்-2வது மனைவி ஜாய் கிரிஸில்டா வயது வித்தியாசம்..என்ன தெரியுமா?

Madhampatty Rangaraj Joy Crizildaa Age Difference : கடந்த சில நாட்களாக, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவிற்கும் இருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 29, 2025, 01:25 PM IST
  • மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா வயது வித்தியாசம்
  • ரொம்ப பெரிய வயது கேப் இல்லை..
  • இருவரது திருமண புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
மாதம்பட்டி ரங்கராஜ்-2வது மனைவி ஜாய் கிரிஸில்டா வயது வித்தியாசம்..என்ன தெரியுமா?

Madhampatty Rangaraj Joy Crizildaa Age Difference : கடந்த சில நாட்களாக, இணையத்தை திறந்தாலே பார்க்கப்படும் ஒரே பெயராக இருக்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். முதல் மனைவி இருக்கும் போதே, ரகசியமாக இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதுதான் இதற்கு காரணம். இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்தும் அனைவரும் தேடி வருகின்றனர். அது குறித்து இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்!

மெகந்தி சர்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவரை நடிகராக பலருக்கு தெரிவதை விட, சமையல் கலைஞராகவும், பல செலிப்ரிட்டி இல்லங்களுக்கு கேட்ரிங் செய்து தருபவராகவும் தெரியும். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புது நடுவராக அறிமுகமானார். தற்போது நடந்து வரும் 6வது சீசனிலும் இவர்தான் நடுவர்.

ஏற்கனவே ஸ்ருதி என்கிற பெண்ணை திருமணம் செய்து, 2 குழந்தைகளுக்கு தந்தையான மாதம்பட்டி ரங்கராஜ், இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் இவர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜாய் கிரிஸில்டா, தாங்கள் திருமணம் செய்து காெண்ட புகைப்படத்தையும், 6 மாதம் கர்ப்பமாக இருப்பதையும் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது, ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபலாக பேசப்படும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

யார் இந்த ஜாய் கிரிஸில்டா?

மாதம்பட்டி ரங்கராஜை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ஜாய் கிரிஸில்டா, ஏற்கனவே திருமணம் ஆனவர். 2018ஆம் ஆண்டு, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்பட இயக்குனர் ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரகள் திருமணத்தை முறித்து கொள்வதாக, கடந்த 2023ல் அறிவித்தனர்.

ஜாய் கிரிஸில்டா, சினேகா, விஜய் உள்ளிட்ட பல செலிப்ரிட்டிகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார். சிவகார்த்திகேயன்,  தொகுப்பாளர் டிடி உள்ளிட்டோருக்கும் நெருங்கிய நண்பராக இருக்கிறார்.

வயது வித்தியாசம்..

ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ் வயது வித்தியாசம் குறித்த விவரமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கு 2025ஆம் ஆண்டின் படி, 42 வயதாவதாக கூறப்படுகிறது. அதே போல, ஜாய் கிரிஸில்டாவிற்கு இந்த ஆண்டின் ஜூலை 17ஆம் தேதி பிறந்தநாள் சென்றிருக்கிறது. இந்த ஆண்டின்படி, அவருக்கு 37 வயது ஆவதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, இவர்களுக்கு இடையே 5 வயது வித்தியாசம் என்று கூறப்படுகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவி:

மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவியின் பெயர், ஸ்ருதி ரங்கராஜ். இவர் ஒரு வழக்கறிஞர். திராவிட சிந்தனை மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டவர். அடிக்கடி தன் துறைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் இவர் கலந்து கொள்வதுண்டு. இவருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கும் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். 

2வது திருமண சர்ச்சையில் மாதம்படடி ரங்கராஜ் சிக்கிய போது, ஸ்ருதி தனது இன்ஸ்டாவில் “ஆம், நான் அவரது மனைவிதான்” என்று குறிப்பிட்டிருந்தார். இத்தனை பிரச்சனைகளிலும் சம்பந்தப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ், இன்னும் இதற்கு ரியாக்ட் செய்யாமலும் வாய் திறக்காமலும் இருக்கிறார். ஆனால் சைலண்டாக ஜாய் கிரிஸில்டாவை இன்ஸ்டாவில் இருந்து அன்ஃபாலோ செய்திருக்கிறார். முன்னர், தனது மனைவியை ஃபாலோ செய்யாமல் இருந்தார். இப்போது மீண்டும் ஃபாலோ செய்துள்ளார்.

மேலும் படிக்க | மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்! கல்யாண அறிவிப்போடு கர்ப்பமும்..முதல் மனைவி நிலை?

மேலும் படிக்க | மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் 2வது மனைவி..ஏற்கனவே திருமணம் ஆனவர்! யார் இந்த ஜாய் கிரிஸில்டா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News