)
Madhampatty Rangaraj New Post : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் சமையல் கலை நிபுணராகவும் இருப்பவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவர், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். காரணம், இவர் தனது கணவர் என்று ஜாய் கிரிஸில்டா சில புகைப்படங்களை வெளியிட்டதுதான். தன் வாழ்வில் எத்தனை பிரச்சனை தன்னை சுற்றி சுற்றி அடித்தாலும், மாதம்பட்டி ரங்கராஜ் அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது குறித்தும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில், அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் கேப்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செலிப்ரிட்டி சமையல் கலை நிபுணர்களுள் ஒருவராக இருப்பவர், மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் மற்றும் பென்குயின் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், பல பெரிய பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் ஆர்டர் செய்து தருபவராக இருக்கிறார். அது மட்டுமன்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில், செலிப்ரிட்டி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக பதிவுகளை வெளியிட்டார். தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜை சுற்றி கடந்த சில வாரங்களாக பல்வேறு சர்ச்சைகள் வலம் வருகின்றன. ஆனால் அது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் எந்த பதிவை வெளியிட்டாலும், கேப்ஷனை தினுசாக எழுதுகிறார், கமண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருக்கிறார். ஸ்டோரியிலும் ரிப்ளை செய்வதற்கான ஆப்ஷன் எதுவும் இல்லை. மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியும் இது குறித்து எதுவும் பேசவில்லை.
புது போஸ்ட்..
மாதம்பட்டி ரங்கராஜ், பள்ளி-கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக போவதையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இது குறித்த பதிவுகளை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். குக் வித் காேமாளி நிகழ்ச்சியின் சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்த அவர், கேப்ஷனில் பகிர்ந்திருக்கும் வார்த்தைகள் யாருக்கோ பதில் கொடுப்பது போல இருக்கிறது.
“Dressed like a chef, tasked like a warrior. The fire is never outside… it’s always inside” என்று கூறியிருக்கிறார். இதன் தமிழகாக்கம், “ஒரு சமையல்காரரைப் போல உடையணிந்து, ஒரு போர்வீரரைப் போல பணி செய்வேன். தீ ஒருபோதும் வெளியே இருக்காது... அது எப்போதும் உள்ளேயே இருக்கும்” என்பதாகும்.
அவர், தன்னை போர் வீரர் என ஏன் சொல்லிக்கொள்கிறார் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. “இது ஒரு பிரச்சனை, இவர் இதை போர் வீரரை போல் வேறு எதிர்காெள்கிறாரா?” என்று சிலர் இது குறித்து பேசி வருகின்றனர். ஒரு சிலர், “மாதம்பட்டி ரங்கராஜை விட்டு விட்டு, வேறு வேலை இருந்தால் பாருங்கள்” என்று கூற, இன்னும் சிலர், “அவர் ஏன் ஒரே நேரத்தில் இரண்டு பேரை திருமணம் செய்தார்?” என்றும் கேட்டு வருகின்றனர். எது எப்படி இருப்பினும், அவர் தன்னை சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து வாய் திறக்கப்போவது இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ