)
Joy Crizildaa Revenge Recent Post Madhampatty Rangaraj : தமிழ் திரையுலகில், அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் கலை நிபுணரான இவர், மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர்தான், தற்போது இணையவாசிகளின் கைகளில் வசமாக சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
தமிழ் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கும் செலிப்ரிட்டி சமையல் கலைஞராக இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர்தான், கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் இவருடையதுதான். ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, 2 குழந்தைகளுக்கு தகப்பன் ஆன இவர், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் நெருக்கமாக பழகியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜாய் கிரிஸில்டா, செலிப்ரிட்டி ஸ்டைலிஸ்ட் ஆக இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் உடுத்தி வரும் பெரும்பாலான ஆடைகளை இவர்தான் வடிவமைத்திருந்தார். இவர், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். கூடவே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜாய்-மாதம்பட்டி ரங்கராஜ் உறவு குறித்த தகவல் வெளியானதற்கு பிறகு, ஊரே இதைப்பற்றி பேசியது. இந்த விஷயம் வெளிவரும் முன்பு வரை, ரங்கராஜ் தனது முதல் மனைவியை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்திருந்தார். ஆனால், இதற்கு பிறகு அவர் ஜாய் கிரிஸில்டாவை இன்ஸ்டாவில் ப்ளாக் செய்து விட்டு ஸ்ருதியை ஃபாலோ செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜாய் கிரிஸில்டா மட்டும் தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்து இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்த புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். ஆனால், ரங்கராஜோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இவர்கள் இருவரும் எங்கும் ஒன்றாக வெளியிலும் வருவதில்லை. எனவே இணையவாசிகள் பலர் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பார்களோ என்று சந்தேக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பழிவாங்கும் கிரிஸில்டா?
சில நாட்களுக்கு முன்பு, மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலானது. இதையடுத்து ஜாய் ரங்கராஜ் உடனே தான் கர்ப்ப பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். சமீபத்தில் ரங்கராஜும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வீடியாேவாக வெளியிட்டிருக்கிறார். இதனை எடிட் செய்தது, மாதம்பட்டி ரங்கராஜ் என்று அவரை டேக் செய்திருக்கிறார்.
ஜாய் கிரிஸில்டா என்பவர், தன் வாழ்விலேயே இல்லாதது போல மாதம்பட்டி ரங்கராஜ் நடந்து கொள்கிறார் என்பது அனைவருக்கம் தெரியும். தனது முதல் மனைவியுடனும் இணக்கமாக இருக்கிறார் என்பதும் தற்போது தெரிந்து விட்டது. எனவே, ஒரு வேளை ஜாய் கிரிஸில்டா இது போன்று புகைப்படங்களை வெளியிடுவது அவரை பழிவாங்கும் நோக்கில் இருக்குமோ? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே திருமணம் ஆனவர்..
ஜாய் கிரிஸில்டாவும் ‘பாென்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ஃபெட்ரிக்கை திருமணம் செய்தவர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவர்கள், 2023ல் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர், மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து தனது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோக்களும் தற்போது மக்களை ஷாக் ஆக்கியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ