)
Joy Crizildaa Madhampatty Rangaraj New Video : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது முக்கிய நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை திருமணம் செய்து இப்போது வாழ மறுப்பதாக ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, தற்போது ரங்கராஜின் புது வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தானும் மாதம்பட்டி ரங்கராஜும் திருமணம் செய்து கொண்டதாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தார். ஆனால், இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வெளியாகவில்லை.
தொடர்ந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த ஜாய் கிரிஸில்டா, இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
Husband (aka) #RahaRangaraj Appa-வின் Alaparaigal @MadhampattyRR #madhampattyrangaraj #chefmadhampatty #chefmadhampattyrangaraj
— Joy Crizildaa (@joy_stylist) August 31, 2025
A man that can betray the woman who carried his child will betray anyone
Read that again…. pic.twitter.com/0mItPCB9Uc
அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், பின்வருமாறு பேசியிருக்கிறார். “ஓய், என்னடி பன்ற..பொண்டாட்டி? மிஸ் யூ. லவ் யூ. வீட்டுக்கு போய் சாப்ட்டு, குளிச்சுட்டி, ட்ரெஸ் மாத்திட்டு வந்துட்டேன். இண்டர்வியூ முடிஞ்சிச்சு. 4 மணிக்கு மீட்டிங் இருக்கு, 3.30க்கு கிளம்புறேன். காபி குடிச்சேன்” என்கிறார். பின்பு முத்தம் கொடுத்து விட்டு “டாட்டா” என்கிறார். அத்துடன் அந்த 41 வினாடிகள் இருக்கும் வீடியோ முடிந்து விட்டது. கேப்ஷனில் ஜாய் கிரிஸில்டா, “Husband (aka) #RahaRangaraj Appa-வின் அலப்பறைகள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். கூடவே, “தன் குழந்தையை சுமந்த பெண்ணை முதுகில் குத்திய ஒரு ஆண், யாரையும் முதுகில் குத்துவான்” என்றும் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரிதாக வைரலாகி வருகிறது.
ஜாய் கிரிஸில்டா முதல் திருமண புகைப்படங்களை வெளியிட்ட போதே, மாதம்பட்டி ரங்கராஜ் அவரை அனைத்து சமூக வலைதளங்களில் ப்ளாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் மாதம்பட்டி ரங்கராஜ், அதில் கமெண்ட் செக்ஷன் அனைத்தையும் ஆஃப் செய்து விட்டார். அவ்வப்போது கேப்ஷனில் மட்டும் யாருக்கோ எதையோ சொல்வது போன்ற கருத்துகளை வெளியிடுவார். ஜாய் கிரிஸில்டாவுடனான சர்ச்சை எழுந்த புதிதில் அவர் தன் முதல் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதுவும் பெரிதாக பேசப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ்தான் இப்படி எதுவும் பேசாமல் இருக்கிறார் என்றால், அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல, “மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி” என்பதை தனது பயோவில் போட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட, “நான்தான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி” என்று இன்ஸ்டாவில் கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ