)
Madhampatty Rangaraj Shares Wedding Video : இணையத்தில் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே பெயர், மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில் இரண்டாம் திருமண சர்ச்சையில் சிக்கிய இவர் மீது, சம்பந்தப்பட்ட நபர் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள புது வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல சமையல் கலை நிபுணராகவும் இருக்கிறார். அனைத்து பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கும் இவரது கேட்டரிங்கில்தான் ஆர்டர். பிரபல காமெடி-சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கடந்த சீசனில் புது நடுவராக பங்கேற்றார். இந்த சீசனிலும் அப்படியே தொடர்கிறார்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜும் தானும் திருமணம் செய்து கொண்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது, ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தகப்பனான ரங்கராஜ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா அடுத்த குண்டை தூக்கிப்போட்டார்.
பரபரப்பான சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஜாய் கிரிஸில்டா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ரங்கராஜுக்கும் தனக்கும் 2023-ல் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்ததாகவும், அவரால் இதற்கு முன்னர் 2 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல் மனைவியிடமிருந்து சட்ட ரீதியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தன்னிடம் தெரிவித்ததாக ஜாய் கிரிஸில்டா கூறியிருந்தார்.
சமீபத்திய வீடியோ…
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு “மிஸ் யூ, லவ் யூ” என்று அனுப்பிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டிருந்தார். தன்னைப்பற்றிய எந்த சர்ச்சைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை பதிலளிக்கவில்லை. தன் வேலையை மட்டும் பார்த்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் பிரேம் குமாரின் மகன் திருமணத்திற்கு கேட்டரிங் செய்து கொடுத்திருக்கிறார்.
இந்த திருமண விழாவில் சிவகார்த்திகேயன், அதுல்யா, சூரி, கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களை கட்டிப்பிடித்து, அவர்களுக்கு சாப்பாடு பரிமாறும் வீடியோவை மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்துள்ளார். கேப்ஷனில், “எல்லா திருமணமும் ஸ்பெஷல், சில திருமணங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை. நடிகர் பிரேம் மகன் கௌஷிக் சுந்தரம் மற்றும் பூஜிதாவின் திருமணத்திற்கு சமைத்து கொடுத்ததில் மகிழ்ச்சி. சாப்பாட்டை மட்டும் பரிமாறவில்லை, அன்பு மற்றும் ஆசிர்வாதத்தையும் இந்த ஜோடிக்கு பரிமாறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ