)
Dhanush Ex Wife Aishwarya Watched Coolie : இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், ரஜினிகாந்தும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து பிரிந்து வாழ தொடங்கினர். இதையடுத்து அவர்கள் கூலி படத்தை ஒரே திரையரங்கில் பார்த்திருப்பது ரசிகர்கள் இணையத்தில் பேசும் விஷயமாக மாறியிருக்கிறது.
கூலி திரைப்படம்:
உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படம், கூலி. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம், சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதனை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தியேட்டரில் பார்த்துள்ளனர்.
ஒரே திரையரங்கில் படம் பார்த்தனர்..!
கூலி திரைப்படம், தமிழகத்தின் பல ஆயிரம் திரையரங்குகளில் ஸ்கிரீன் செய்யப்பட்டது. இதில் சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் பிரபலங்கள் ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பர். அப்படி பார்க்கும் ஒரு திரையரங்குதான் ரோகிணி.
இந்த திரையரங்கில் இன்று வெளியான கூலி படத்தின் முதல் நாள்-முதல் காட்சியை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், அவரது முன்னாள் கணவர் தனுஷும் ஒரே திரையரங்கில் பார்த்திருக்கின்றனர். ரோகிணியில் பல ஸ்கிரீன்கள் இருக்கின்றன. எனவே, அவர்கள் வெவ்வேறு ஸ்கிரீன்களில் படம் பார்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மிருணாள்-தனுஷ் காதல்?
நடிகர் மிருணாள் தாகூரும் தனுஷும் கடந்த சில நாட்களாக டேட்டிங் வருவதாக கூறப்பட்டது. மிருணாள் நடித்த சில படங்களின் விழாக்களில் தனுஷ் கலந்து கொண்டு வந்ததை அடுத்து, இந்த சந்தேகம் எழுந்தது. இது குறித்து மிருணாள் சமீபத்தில் பேசினார். அப்போது தானும் தனுஷும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறினார். இருப்பினும் இவர்கள் தங்கள் உறவை இப்போதைக்கு ரகசியமாக வைத்துக்கொண்டு இருவ்வதாக கூறப்படுகிறது.
படம் எப்படி இருக்கு?
கூலி படம், தற்போது உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கிற கருத்தும் எழுந்துள்ளது. இன்னும் சிலர் படத்தில் குறை சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த லாஜிக்கல் தவறுகளும் இல்லை என்று கூறி வருகின்றனர். 3 நாட்கள் முடிந்த பிறகு படத்தின் உண்மையான வசூல் மற்றும் விமர்சனம் குறித்த நிலவரம் வெளியாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ