DNA Combo To Reunite Again : தமிழ் திரையுலகில் டாப் இடத்தில் இருக்கும் நடிகர் தனுஷ். இவரது ‘3’ படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர்கள் இருவரும் அதன் பிறகு பல படங்களில் ஒன்றாக வேலை பார்த்துவிட்டனர். சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு, இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
DNA காம்போ:
2012ஆம் ஆண்டில் வெளியான படம், 3. இந்த படத்தில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருப்பர். இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது அதன் பாடல்களாகும். இந்த படத்தின் மூலமாகத்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகி, “ஒய் திஸ் கொலவெறி”பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்டானார். அதன் பிறகு அவர் வாசலை தேடி, பல டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகள் தேடி வந்தன.
அனிருத், பிற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் தனுஷின் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தார். தனுஷ் அனிருத் கூட்டணியில், 3 படத்திற்கு பிறகு, மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது. இதைத்தாண்டி, தனுஷ் தான் தயாரித்த எதிர்நீச்சல், நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களிலும், அனிருத்தையே இசையமைக்க வைத்தார். இவர்கள் இணையும் படத்தை DNA காம்போ என்றுதான் ரசிகர்கள் குறிப்பிடுவர்.
சில நாட்கள் பிரிவு!
தனுஷும் அனிருத்தும், கடந்த சில வருடங்களாகவே அவ்வளவாக படங்களில் இணைந்து வேலை பார்ப்பதில்லை. அதற்கான காரணம் என்னவென்பதும் தெரியவில்லை. 2022ல் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம்தான் அவர்கள் கடைசியாக ஒன்றாக இணைந்து பணியாற்றிய படமாகும். அதன் பிறகு அவர்கள் இணைந்து எந்த படத்திலும் பணியாற்றவில்லை.
இவர்கள் முன்னர் போல ஒன்றாக இணைந்து வேலை செய்யாததற்கு காரணம் என்னவென்பது தெரியவில்லை. இப்போது இவர்கள் மீண்டும் ஒரு புது படத்தில் இணைந்து பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
யாருடைய படம்?
‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. தனுஷும், அடுத்தடுத்து தனது லைன்-அப்பில் இருக்கும் படங்களை முடித்து விட்டு, இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்குதான், அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொருவரும் இருக்கிறாரா?
தமிழரசன் பச்சமுத்து-தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனவே, யார் மியூசிக் போடப்போவது என்பதை, அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | ஆளே மாறிப்போன எமி ஜாக்சன்! கன்னங்கள் ஒட்டி, உடல் மெலிந்து..வைரல் போட்டோ
மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா-இல்லையா? அவரே சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









